மோசடியாளனை காப்பாற்ற UNP தீவிர முயற்சி - இது ரணிலின் மறுபக்கம்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோப் குழுவில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், அர்ஜூன் மகேந்திரனை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கும் நோக்கில் மாற்று அறி;க்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.
இந்த அறிக்கைக்கு பெரும்பான்மை ஆதரவினை திரட்டும் நோக்கிலான முனைப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தயாரி;த்த அறிக்கையை அங்கீகரித்து ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்கள் கையொப்பிட்டுள்ளனர்.
கோப் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதினொரு உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
அர்ஜூன் மகேந்திரனை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கோப் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த சந்திப்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என கோப் குழு உறுப்பினர் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
Post a Comment