Header Ads



ராஜபக்சவினரை எந்த வகையிலும் பாதுகாக்கமாட்டேன் - UNP யிடம் மைத்திரி திட்டவட்டம்


ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும் எப்போதும் கேட்டதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுடன் நேற்று முன்தினம்(13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் நான் இணைத்தே அனைத்தையும் கூறினேன். விசாரணை நடத்துபவர்கள் அவர்கள் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகளை எனக்கு அறிவிப்பதில்லை.

அமைச்சர் கார் ஒன்றை எடுத்துச் சென்றதாக கூறி வழக்கு தொடர்கின்றனர். அப்படியென்றால் அனைத்து அமைச்சர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர வேண்டும்.

குறிப்பிட்ட அமைச்சா் ஏதோ பழிவாங்க நான் இதனை செய்கிறேன் என்று அவர் நினைக்கின்றார். கங்காராம விகாரையில் யானை ஒன்றை கைப்பற்ற நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளனர். விகாராதிபதி என்னிடம் கேட்கும் வரையில் எனக்கு எதுவும் தெரியாது.

மூன்று கடற்படையினரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றமை அவர்கள் படம்பிடித்து ஊடகங்களுக்கு வழங்கி அவர்கள் தமக்கு சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள்.

இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதும் வெளியில் வந்து நாம் படையினரை பழிவாங்குவதாக கூறுகின்றனர். இதனையே நான் கூறினேன். நான் கோத்தபாய ராஜபக்சவின் பெயரைக் கூட கூறவில்லை. இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று நான் கூறினேன். இது வலுவான அரசாங்கம் என்றும் கூறினேன் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் ரணில், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து கொள்வது முக்கியமானது. நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை துரித்தப்படுத்த வேண்டியதையே அனைவரும் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம், அகில விராஜ் காரியவசம், ரவிந்திர சமரவீர, சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. இன்னமும் மக்கள் இவனுகளை நம்புகின்றனர் !!! ???

    ReplyDelete
  2. இந்த அரசு குற்றவாளிகளை நன்கு காப்பாற்றி வருகிறது.இது மறுக்க
    மறைக்க முடியாத உண்மை!

    ReplyDelete

Powered by Blogger.