Header Ads



பாராளுமன்றத்தில் அமைச்சர்களாலும், Mp களாலும் பாலியல் தொல்லை - உபேக்ஷா

'இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்" என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.  

அனைத்து நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தினால் (IPU) நடத்தப்பட்ட புதிய சாதனை எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 

“தேவையற்ற அழுத்தங்களை, சிலர் என்மீதும் திணித்தனர். காதலை வளர்த்துக்கொள்ளல், அவர்களுடைய அலுவலகங்களுக்கு அழைத்துக் கொள்ளல், உதவிகளைச் செய்தல், வெளிநாடுகளுக்கு கூடவே அழைத்துச் செல்லல், வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னரும், அழைப்புகளை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு அழுத்தங்களை நான் எதிர்கொண்டேன்” என்று, அவர் இதன்போது தெரிவித்தார்.   

“எவ்வாறாயினும், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்தாலும், தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.    

5 comments:

  1. அட போங்கம்மா இதெல்லாம் ஒங்களுக்கு ஒரு சமாச்சாராமா ? நீங்க வாரத்துக்கும் அதுதானே காரணமே.......... அதுக்குள்ள ஒரு .... க்கா ..........

    ReplyDelete
  2. "பெண்கள் புர்கா அணிந்து முகத்தையும் மூடி வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகின்றது" என்று அட்வைஸ் சொல்ல அரேபிய இறக்குமதி மூளைகள் ஒன்றும் வரவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் நீங்களே சொல்லி விட்டீர்களே. ..
      முட்டாள்

      Delete
  3. ரிஸ்வின் இஸ்மாத்..
    அரேபிய இறக்குமதிகள் தான் உங்கள் பெயரும்.. நீங்கள் முஸ்லிமாயிருப்பதும் ஒரு வகையான அரேபிய இறக்குமதி தான்.

    உங்களுக்கு ஐரோப்பிய இறக்குமதி தான் ஆவல் என்றால் உங்கள் பெயரை ஜோர்ஜ் புஷ் என்றோ அல்லது டோனி பிளேயர் என்றோ மாற்றுங்கள்.

    இஸ்லாம் ஜாஹிலியாக்கால பெண்கள் போல வீதிகளில் அலையாதீர்கள் என்று சொன்னது. அதுதான் உண்மை.
    உங்களுக்கு முகத்தை காட்டிக்கொண்டு அந்நிய ஆண்களுக்கு முன் பல்லிளித்துக்கொண்டு இருக்கும் பெண்கள் தான் சரியாக தெரிகிறதோ.?

    சம்பந்தமில்லாத பதிவிற்கு வந்து சம்பந்தமில்லாமல் உங்கள் வக்கிரப்புத்தியை காட்டவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Hahaha அவருக்கு உறைக்காது bro. மனவியாதியில் அவதுப்படுவர்கள் இப்படித்தான்.

      Delete

Powered by Blogger.