Header Ads



வரலாற்றில் முதன்முறையாக, அமைச்சர் ஒருவருக்கு புகழாரம் சூட்டிய JVP

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

காலி எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஹந்துன்நெத்தி, அமைச்சர் கயந்தவை புகழ்ந்து பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சரியாக, தெளிவாக கருத்துக்களை வெளியிட்டு மனசாட்சிக்கு அமைய வாழும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க முக்கியமானவர்.

முக்கியமாக காலி மாவட்ட மக்களுக்கு இது பெருமை. தாம் வாக்களிக்கும் பிரதிநிதிகளில் மதிக்க கூடியவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் ஒரு சிலரே.

எனது நாடாளுமன்ற வரலாற்றில் அப்படியான சிலரையே நான் பார்த்திருக்கின்றேன். அவர்களில் அமைச்சர் கயந்தவும் இருக்கின்றார். இது அவருக்கு வாக்களித்தவர்களுக்கு மிகப் பெரிய கௌரவம் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.