Header Ads



மொசூல் நகரைவிட்டு IS பயங்கரவாதிகள் ஓட்டம் - அமெரிக்கத் தளபதி

இராக்கில் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் மொசூல் நகரிலிருந்து இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஓட்டம் பிடித்து வருவதாக அமெரிக்கத் தளபதி கூறினார்.

சிரியாவிலும் இராக்கிலும் பல இடங்களைத் தங்கள் கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்த இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மொசூல் நகரைக் கைப்பற்றினர். அந்த நகரை இஸ்லாமிய தேசத்தின் தலைநகராக அவர்கள் அறிவித்தனர். அந்த நகரை மீட்கும் இறுதிக்கட்டத் தாக்குதலை இராக் ராணுவம் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், நகரின் எல்லையோரம் உள்ள பல பகுதிகள் அரசுப் படைகள் வசம் வந்துள்ளன என்று அமெரிக்க தளபதி கேரி வொலஸ்கி கூறினார். ஐ.எஸ்.ஸூக்கு எதிரான கூட்டுப் படையின் தரைப் படைப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்கி வருகிறார். அவர் கூறியதாவது:

இராக்கில் நடைபெறும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். தாக்குதலின் தீவிரத்தை வரும் நாள்களில் அதிகரிப்போம்.

மும்முனைத் தாக்குதலைத் தாங்க முடியாமல், ஐ.எஸ். பயங்கரவாதிகள் நகரைவிட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். நகரைவிட்டு வெளியேறும் உள்ளூர்வாசிகள் வேடத்தில் பயங்கரவாதிகளைத் தப்பவிட மாட்டோம். தற்போது அங்குள்ள 3,000 முதல் 4,500 பயங்கரவாதிகளில் பலர் வெளிநாட்டினர். அவர்களால் உள்ளூர்வாசிகளுக்கு இடையே மறைந்திருக்க முடியாது என்றார் அவர்.

1 comment:

  1. அடடா! என்ன புதுமை ரஷ்யா சிரியாவுக்கு அடிக்கும் அடியில் ஈராக்கிலுல்ல ISIS தீவரவாதிகள் ஓட்டமெடுக்கின்றன. இதை ISIS நணபர்களான அமெரிக்காவே சொல்கின்றனர். ஒரு வேலை ரஷ்யாவின் அடுத்த தாக்குதல் ஈராக்கிலுல்ல ISIS தான் எனபதாலோ ?
    நம் செல்லப்பிள்ளைகளான ISIS ஐ காப்பாற்ற எப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.