IS பயங்கரவாதிகளிடமிருந்து முக்கிய நகரத்தை கைப்பற்றிய, துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள்..!
-BBC-
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து அடையாள முக்கியத்துவம் வாய்ந்த டபிக் நகரை துருக்கி ஆதரவு கிளர்ச்சி ஆயுதப்படையினர் கைப்பற்றிருப்பதாக சிரியாவிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை இந்த நகர் கைப்பற்றப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் வட்டாரங்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் துருக்கி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இறுதி நாள் மோதல் காட்சியை விவரிக்கும் இஸ்ரேலிய பாரம்பரிய பெயர்களில் ஒன்றாக டபிக் இருப்பதால், இஸ்லாமிய அரசு குழுவின் தாக்குதல்களில் இந்த டபிக் சிறப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
துருக்கியோடு சிரியாவின் எல்லைப்பகுதி ஓரமாக அமைந்திருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்களின் தொடர்களில் இது ஒன்றாகும். இதனை கைப்பற்ற கடந்த ஆகஸ்ட் மதத்திலிருந்து துருக்கி பெரியதொரு தாக்குதலை தொடங்கியது.
சிரியா யுத்தம் ஒரே குழப்பம்.
ReplyDeleteஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் யுத்ததில் வெற்றிபெற்றுவதாக செய்திகள் வருகிறது.
சிரியா கிழர்ச்சியாளர்கள், ISIS, சிரியா அரச படைகள், துருக்கி, ரஷ்யா, அமேரிக்கா, இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர். ஒரே ஒரு ஒற்றுமை எல்லாவற்றிலும் மக்கள் இறக்கிறார்கள்.
உலகில் 50 முஸ்லிம் நாடுகள் இருந்தும் என்ன பயன். எல்லோரும் உங்களை போல் சுயபுராணம் பாடுவதிலும், மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிப்பதிலும் தான் No.1 யில் இருக்கிறார்கள். ஏன்?