Header Ads



ஐசே, விசர் விளையாட்டு விளையாடாதே - FCID க்கு கூறிய அமைச்சர்

சுதேச விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன நிதி மோசடி விசாரணைப் பிரிவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கால்ல லபதூவ சிறிதம்ம வித்தியாலயத்தில் இன்று -16- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரச ஊழியர்களை பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியாது. சிறிய வேலை ஒன்றுக்கு அரச ஊழியர்களை தொடர்பு கொண்டால், ஏன் FCID செல்லவா சொல்கின்றீர்கள் என கேட்கின்றார்கள்.

நான் சொன்னேன் இல்லை வீடு செல்லுங்கள் என்று. பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரச உழியர்களை கட்டுப்படுத்த முடியாது.

குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அரச ஊழியர்களை பொலிஸார் கட்டுப்படுத்த முடியும். பி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து ஊழியர்களை கைது செய்ய முடியும் செயலாளருக்கு அறிவிக்க வேண்டியதில்லை.

எனது அமைச்சின் ஒரு சிலருக்கு FCIDக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நான் அவர்களை போக வேண்டாம் என சொன்னேன்.

பின்னர் FCIDயுடன் தொடர்பு கொண்டு அங்கிருந்த அதிகாரிக்கு “ஐசே விசர் விளையாட்டு விளையாடாமல், ஒழுக்க விதியில் ஏதேனும் இருந்தால் அதனை அமைச்சின் செயலாளர் ஊடாக அறிவியும்” என்று கூறினேன். அரசியல் அமைப்பிற்கு அமையவே அரச பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக அரச ஊழியர்கள் மஹிந்த சிந்தனையை அமுல்படுத்தியிருப்பார்கள் அவ்வாறு அமுல்படுத்திய அனைவரையும் பாதுகாக்க நான் தயார் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.