எதற்காக நோபல் பரிசு எனக்கு, கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை - ஒபாமா
எந்த நோக்கத்தின் அடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கொடுத்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்றதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், எதன் அடிப்படையில் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
ஜனாதிபதியாக பதவியேற்ற 6 ஆண்டுகளில் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் மற்றும் லிபியா ஆகிய 7 நாடுகளில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஒபாமா ஒப்புதல் அளித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவர் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுப்படுவது சரியா எனவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒபாமா நேற்று தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பப்படும் ’Late Late Show’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அப்போது, நெறியாளர் ஒபாமாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
‘இதுவரை எத்தனை பட்டங்களை பெற்றுள்ளீர்கள்’? என ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒபாமா ‘நான் இதுவரை 30 கெளரவ பட்டங்களை பெற்றுள்ளேன். இதுமட்டுமில்லாமல், அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளேன்’ என ஒபாமா கூறியுள்ளார்.
‘அப்படியா? எதன் அடிப்படையில் நோபல் பரிசை உங்களுக்கு அளித்தனர்?’ என நெறியாளர் கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த ஒபாமா ’உங்கள் கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்க வேண்டுமானால்,
நிச்சயமாக நோபல் பரிசை எதற்கான எனக்கு அளித்தார்கள் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை’ என வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
நோபல் பரிசு குறித்து ஜனாதிபதி ஒபாமா அளித்த இந்த பதில் தற்போது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
ஒபாமாவின் ஒப்புதலுக்குப் பின், 6 முஸ்லீம் நாடுகளைத் துவம்சம் செய்து, அப்பாவி முஸ்லிம்களின் அழிவிற்கும் காரணமாக இருந்துள்ளார்.
ReplyDeleteஅதற்கு, அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கக் கூடாதா?
அமெரிக்காவின் யூத லொபி, ஒபாமாவிற்குப் பரிசு கிடைக்க, பரிந்துரைத்திருக்கும்.