Header Ads



சுவிட்ஸர்லாந்தில் தமிழர்கள் மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை


சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.