அரசாங்கத்திற்கு எதிராக "மோசடிக்காரர்களும் பாதுகாவலர்களும்" எனும் தொனிப்பொருளில் நாடுதழுவிய வேலைத்திட்டம்
(எம்.சி.நஜிமுதீன்)
மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து "மோசடிக்காரர்களும் பாதுகாவலர்களும்" எனும் தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பிலும், இரண்டாம் திகதி காலியிலும், மூன்றாம் திகதி அம்பாந்தொட்டயிலும், நான்காம் திகதி குருநாகலிலும் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடகையில்,
இந்த அரசாங்கத்தால் நாட்டில் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மீறிவிட்டது. ஊழல்,மோசடிகளை இல்லாமல் செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழல், மோசடிக்காரர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினை மேற்கொள்கிறது. ஆகவே தேசிய அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை வென்று கொடுக்கும் என இனி ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
அத்துடன் நாட்டில் தற்போது தராதரம் பார்த்து சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சாதாரணமானவர்கள் சிறு தவறு செய்தாலும் அவர்களுக்கு உரிய முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனினும் வசதி படைத்தவர்களும் அதிகாரத்திலுள்ளவர்களும் பாரியளவிலான குற்றங்களைச் செய்கின்ற போதிலும் அவர்கள் உரிய சட்ட நடைமுறைக்கு உட்படுத்தப்படுவதில்லை. அவ்வாறானவர்களை ஆட்சியிலுள்ளவர்கள் பாதுகாக்கின்றனர். இது ஜனநாயகத்திற்குப் புறம்பான விடயமாகும்.
ஆகவே தேசிய அரசாங்கத்தில் உள்ள இரு கட்சிகளும் நாட்டில் சிறந்த ஆட்சியை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. குறித்த இரு கட்சிகளினதும் ஆட்சி காலாவதியாகி விட்டது. எனவே நாட்டில் முறையான ஆட்சியை கொண்டு நடத்
Let's devise your demonstration to summon the prime minister to the court for a rigorous inquiry for his alleged association with former governor of central bank.
ReplyDelete