Header Ads



"கணொளியை தன்னிடம் காட்டுமாறு, பொலிஸாருக்கு உத்தரவிடுவது சட்டவிரோத செயல்"

கடந்த எட்டாம் திகதி அதிகாலை கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான காணொளிகளை, தன்னிடம் காட்டுமாறு நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அரசியல்வாதி அனைத்து கண்காணிப்பு கமரா காணொளிகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தவிட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் தனது மகன் அல்லது தனது பாதுகாப்பாளர்கள் குறித்த காணொளியில் உள்ளார்களா என்பது தொடர்பில் தன்னிடம் காட்டுமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியை அடிப்படையாக கொண்டு அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான கணொளியை தன்னிடம் காட்டுமாறு குறித்த அரசியல்வாதி, பொலிஸாருக்கு உத்தரவிடுவது சட்ட விரோதமான செயல் என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்திற்கு தனது மகன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றமையினால் அரசியவாதியினால் அவ்வாறு பொலிஸாருக்கு உத்தரவிட முடியாது.

அத்துடன் நாட்டின் உயர் மட்ட அரசியல்வாதியாக இருந்த போதிலும் சட்டத்தை மீற முடியாதென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் குறித்த அரசியல்வாதியின் மகனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவில்லை என ஆங்கில ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

2 comments:

  1. Seems the same ROAD via MARA sons lived and not questioned every for their behaviour.

    We thought MY3 is straight but now we can see there bends too

    ReplyDelete
  2. ஊடகங்களின் செய்திகளை விட்டு ஜனாதிபதிக்கு நேரம் கொடுப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.