Header Ads



மேல் மாகாணத்தில் நேற்றிரவு, பொலிஸார் குவிக்கப்பட்டதன் விளைவு..!

மேல் மாகாணத்தில் பொலிஸார்  நேற்றிரவு (13) மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 1262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11 மணிமுதல் அதிகாலை 1 மணிவரை குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.

இவர்களில், பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 46 பேர் அடங்குவதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் 540 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 177 பேர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 17 பேர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 23 பேர் இந்த சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய 103 பேர், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் 323 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் மற்றும் முப்படையிலிருந்து தப்பிச்சென்ற நால்வரும் இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  குறித்த சுற்றிவளைப்புகளில் மேல் மாகாணத்தச் சேர்ந்த 3072 பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. VERY GOOD JOB.BETTER TO WIPE OUT MAHINDA BROKERS.

    ReplyDelete
  2. ஜனாதிபதி கோபித்திருக்க வேண்டிய தில்லை கெட்டதிலும் ஒரு நல்லது இப்படி அடிக்கடி செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. Good job.
    இந்த நடவெடிக்கையின் போது அசெளகரிகத்துக்கு உள்ளானவர்கள் பாதுகாப்பு பிரிவை பெருந்தன்மையுடன் மன்னித்து வரவேட்ப்பார்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
  4. Excellent job .It can be implemented all district.

    ReplyDelete
  5. குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் பொறுப்பு பொலிசாருடையது இததற்கு முதல் இதை செய்து இருந்தால் இத்தனை குற்றவாளிகள் இன்று உருவாக வாய்பில்லை ஏதோ ஜனாதிபதிக்கு நன்றி

    ReplyDelete

Powered by Blogger.