Header Ads



மக்கள் பசியுடன் இருக்கையில், நல்லிணக்கம் சாத்தியமா..? ரீட்டா ஐசக்

மக்கள் வயிற்றுப்பசியுடன் இருக்கையில்  நல்லிணக்க பொறிமுறைகள் சாத்தியப்படுமா?    சிறுபான்மையின் மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விஷேட நிபுணர் ரீட்டா ஐசக் நிதியா தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை உள்ளிட்ட விடயங்களில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

எவ்வாறாயினும் இலங்கையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பரிந்துரைககளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை பெப்ரவரி மாதம் இறுதியில் ஜெனிவாவில் சமர்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விஷேட நிபுணர் ரீட்டா ஐசக் நிதியாவிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

No comments

Powered by Blogger.