ரணிலின் நண்பனுடைய மருமகன், கைது செய்யப்படுவாரா..?
மத்திய வங்கியின் முறிக் கொள்வனவு குற்றச்சாட்டு தொடர்பில் Perpetual Treasures நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன்மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பணிப்பாளர்களை கைது செய்ய வேண்டும்என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது
இன்று கூடிய கோப் குழு இந்த பரிந்துரையை செய்துள்ளதாக அந்த குழுவின் ஐக்கியதேசியக் கட்சியின் உறுப்பினரும் பிரதியமைச்சருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டதும் அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படவேண்டும் என்று கோப் குழு பரிந்துரைத்துள்ளதாக பெரேரா குறிப்பி;ட்டுள்ளார்.
முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தம் காரணமாக கோப் குழுவில் இருந்து அதன்தலைவரான ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இன்று வெளிநடப்புசெய்த நிலையிலேயே இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அஜித் பி பெரேரா ஊடகங்களுக்குதெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முறிக் கொள்வனவு விடயத்தில் பல மில்லியன் ரூபாய்கள் ஊழல்இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment