அவதூறுகள் எனக்குப் பழகிவிட்டது - மைத்திரிபால
அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஆயுதப்படைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான விருதுகளை வழங்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.
‘சில தரப்புகள் எதையும் புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றன. சில ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், அரசார்பற்ற நிறுவனங்கள், துரோப்படைகள் செய்வது போலவே, சிலவேளைகளில் இதுவும் தோன்றுகிறது.
அண்மையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நான் நிகழ்த்திய உரை சிலரால் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
சில ஊடகங்கள் தமக்கான சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் தவறாகப் பயன்படுத்துகின்றன.
ஆனால், எவ்வளவு தான் அவர்கள் என்னை விமர்சித்தாலும், தாக்கினாலும், எதிர்த்தாலும், ஆயுதப்படைகளின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் இழக்கப் போவதில்லை.
அரசியலில் விமர்சனங்களும் அவதூறுகளும் எனக்குப் பழகி விட்டது. சில அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்க நான் ஆணையிட முடியாது.
அரசசார்பற்ற நிறுவனங்களால் இந்தியாவில் ஏற்படுத்தப்படும் தடைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விபரித்திருந்தார்.
சிறிலங்கா அனைத்துலக விவகாரங்களில் ஏற்பட்ட தடைகளை நட்பு நாடுகளின் துணையுடன் வெற்றிகரமாக சமாளித்திருக்கிறது.
எனினும் உள்நாட்டிலும் அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment