ஜனாதிபதியின் நிலைப்பாட்டிலேயே பிரதமர் உள்ளார் - கபீர்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிலேயே பிரதமரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹஷிம் இதனை தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் தாமும் இணைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களை நடாத்தி பெற்றுக் கொண்ட நல்லாட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு மாத்திரமன்றி அனைவருக்கும் இருப்பதாக பிரதமர் தெரிவித்திருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவத்தினரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ அறிவிக்க வேண்டும் என்ற ஒரு சர்ச்சை அந்த இடத்தில் எழுந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மாத்திரமின்றி பிரதமரின் நிலைப்பாடும் ஒன்றாகவே காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Who can explain the following ?
ReplyDelete1.Independent Srilanka ?
2.Independent commissions ?
Why should Independent commissions inform you of its
actions if they are independent ? What is this
nonsense you get upset about top men of the forces
and not about former senior cabinet ministers ?
Are they , the top men of the forces HOLY ?