இலங்கை முஸ்லிம்களின் தூய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு வேட்டுவைக்கும் ஷீஆ + காதியானி
தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். தேசிய சூரா சபையின் தலைவர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்அ வர்களது புதல்வருமான தாரிக் மஹ்மூத் தலைமையில் இவ்விஜயம் இடம்பெற்றது.
விஜயத்தின்போது கல்குடா மஜ்லிஸ் அஷ்ஷுரா, ஏறாவூர் பள்ளிவாசல்களது சம்மேளனம், காத்தான்குடி பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களது சம்மேளனம், அம்பாறை மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்புக்கள் இடம்பெற்றன. அங்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. விஜயத்தில் “தற்கால சூழலில் அமானிதங்கள் எனப்படும் எமது பொறுப்புக்கள்” எனும் தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்ட மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபை (Inter Religious Consultative forum) இன் முஸ்லிம்கள் சார்பான அங்கத்தவர்களில் ஒருவரும் தேசிய சூரா சபையின் உபதலைவர்களில் ஒருவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் அவர்கள் உரையொன்றை நிகழத்தினார்.
சர்வதேச ரீதியாக இன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். நாகரீகங்களுக்கிடையிலான மோதல்கள் பற்றி எழுதும் பலர் (Islamophobia) இஸ்லாம் பற்றிய பீதியை உண்டு பண்ண களமிறங்கியிருக்கிறார்கள். ISIS போன்ற தீவிரவாதிக் குழுக்களது செயல்பாடுகளால் இஸ்லாம் கூட தவறாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையிலும் முஸ்லிம் சமூகத்தின் தூய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் ஷீஆ, காதியானி போன்றன செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தை வேரறுக்கும் நோக்குடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பல அமைப்புக்கள் இயங்குகின்றன. உள்ளார்ந்த பிரச்சினைகளில் ஆத்மீக வறுமை, மனித பலவீனங்கள், உட்பூசல்கள், அறிவினம், இஸ்லாம் பற்றிய அறிவில் குளறுபடி, வறுமை, தரமான தலைமைகளுக்கான பற்றாக்குறை, அரசியல்வாதிகளது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள், குடும்ப அமைப்பு எனும் நிறுவனம் ஆட்டம் காண்பது, வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பாதக விளைவுகள், இளைஞர் பிரச்சினைகள் போன்றனவற்றை குறிப்பிடமுடியும்.
முஸ்லிம் சமூகத்தின் 22% ஆனவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். 14% ஆன முஸ்லிம்கள் அடிப்படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் உள்ளனர். சுகாதாரத் துறையில் முஸ்லிம் சமூகம் மிகவுமே பின்நிலையில் உள்ளது. பிறசமூகங்களுடனான உறவுகள் பலவீனமடைந்திருக்கின்றன. அவர்கள் எம்மைப் பற்றி தப்பான மனப்பதிவுகளுடன் வாழும் அதேவேளை அவர்களிற் சிலர் எம்மைப் பற்றிய மிகப்பிழையான கருத்துக்களை மீடியாக்கள் உட்பட இன்னும் பல வழிமுறைகள் ஊடாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது இன உறவுகளை மென்மேலும் பலவீனமாக்குகிறது. பெரும்பான்மையினரைப் பகைத்துக் கொண்டு இந்த நாட்டில் முஸ்லிம்களால் எப்படியுமே வாழ முடியாது என்பதால் மீள் நல்லிணக்கத்துக்கும் சமாதான சகவாழ்வுக்குமான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய உடனடித்தேவை இருந்துவருகிறது.
முஸ்லிம் சமூகம் பண்பாட்டுத் துறையில் வீழ்ச்சி கண்டிருப்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துவருகிறது. முஸ்லிம் சமூகத்தில் மதமாற்றம் தாராளமாக இடம்பெறுவதுடன் தனித்துவத்தை இழக்கும் நிலையில் பலர் உள்ளனர். 2014, 2015 பல்கலைக்கழக பிரவேசத்தை எடுத்து நோக்கினால் எமது விகிதத்தை விட மிகவும் குறைந்த மட்டத்திலேயே பெரும்பாலான துறைகளுக்கு மாணவர்கள் நுழைகிறார்கள். வர்த்தகப் பிரிவுக்கு 2.4%, மிருக வைத்திய துறைக்கு 3%, பொறியியல் துறைக்கு 4.6% போன்ற தரவுகள் முஸ்லிம் சமூக கல்வி மட்டத்துக்கு சான்றுகளாகும். ஆனால், இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு சிறுபான்மையினர் என்ற வகையில் அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருந்தும் அவற்றைப் பயன்படுத்தி எம்மை வளர்த்துக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. இதற்கெல்லாம் சமூகத்தின் தலைமைகளும் புத்திஜீவிகளும் துறைசார் நிபுணர்களுமே பொறுப்பானவர்கள்.
மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நிஃமத்துக்களை சமூக முன்னேற்றத்துக்காகவும் அதன் ஸ்திரப்பாட்டுக்காகவும் எந்தளவு தூரம் பயன்படுத்துனீர்கள், தியாகம் செய்கிறீர்கள் என விசாரிப்பான். இது அமானிதமாகும். பிரச்சினைகளைத் தீர்க்க இஸ்லாம் 'சூராவை' சிறந்த அணுகுமுறையாகக் காண்கிறது. "(நபியே) நீர் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக", "அவர்கள் தமது விவகாரங்களை கலந்தாலோசனையுடன் அமைத்துக்கொள்வார்கள்" போன்ற குர்ஆனிய வசனங்களும் நபிகளார் (ஸல்) அவர்களது வழிகாட்டல்களும் நடைமுறைகளும் இதனை வலியுறுத்துகின்றன.
எனவே, பிரச்சினைகள் வந்த பின்னர் தீர்வுகளை காண்பதைவிட வரமுன்னர் முன்னேற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகும். முஸ்லிம் சமூகத்திலுள்ள மிகப்பெரிய பிரச்சினை உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுவதாகும். ஆய்வு, தூரநோக்கு, சமயோசிதம், கூட்டான ஆலோசனை என்பன தான் இன்று தேவைப்படுகிறது. அதற்கான களத்தையே தேசிய சூரா சபை அமைத்துவருகிறது என்றும் அஷ்ஷைய்க் பளீல் தெரிவித்தார்.
National shoora councils should have some national program to identity Muslim problems in Sri Lanka and give priority for that issues that need more attention.. Issue of poverty is life and death issue.. Do we have any real mechanism to reduce poverty///
ReplyDeleteall what we do is relative and some rich people are helping out..
I do not think that we do not have money and resources to help poor in Sri Lanka but we do not have system or good mechanism to help them out,,
We can not expect people from Saudi or any Muslim country will come to Sri Lanka to give us a mechanism ...
we can not expect our politicians care about it..
We can not expect Islamic groups have all inclusive program or mechanism to do this .. mind you each group will help their own people as if Non-Group Muslims are not true Muslims..
I think that it is organization like National Shoora should do this.
I do not think that we do not have money .. But our wealth and money is spent in things that do not come in order of priory ...
We spend a lot of money in construction of extra Arabic colleges or mosques .. while we have more than 300 Arabic colleges.. each groups want to have their Arabic colleges or schools or Mosque..
In this way, we have spent a lot of money on building at the expense of Human life.. While poor Muslims do not have food to eat, cloths to wear, money to buy school items for their children we have a lot of money to build our Arabic college or extra mosques.. Is it what Islam teaches us?
Mean time we spend a lot of money on wedding and extra functions while poor next doors.. Muslim or Non-Muslim do not have one time meal to eat? is it Islam that teaches us to behave like this...
We have a lot of show off like this ..
So, First National Shoora council need to educate people .. Take on rich and educated people on district base and educate them on issues like this.. Away from group mania do some thing like this..
A lot to do like this in many other areas as well