மாளிகாவத்தை மையவாடியில், துருக்கி - உதுமானிய பேரரசின் முதலாவது இலங்கை பிரதிநிதியின் ஜனாஸா
ஜனாஸா நல்லடக்கம் ஒன்றுக்கு சென்றிருந்த போது மாளிகாவத்தை மையவாடியில் ஒரு பழைய கல்லறை என் கண்ணில்பட்டது.
அதில் பதிக்கப்பட்டிருந்த தகவலில், துருக்கி உதுமானிய பேரரசின் ( The Imperial Ottoman Empire) முதலாவது இலங்கை பிரதிநிதியாக இருந்த ஹஸன் லெப்பை அவ்து கண்டு மரிக்கார் எப்பன்தி ( Hassen Lebbe Avdu Candu Marikar Effendi ) என்பவரது கல்லறை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1890ம் ஆண்டு மரணித்த இவர், மாளிகாவத்தை மையவாடியின் முதலாவது நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் பற்றி இணைய தளத்தில் தேடிய போது ஒரே ஒரு இணைய தளம் கிடைக்கப்பெற்றது.
அதில் (ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்) கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அருகில் இருந்த மையவாடியை சுகாதார சட்டத்தின் Sanitary Ordinance கீழ் அகற்ற வேண்டியிருந்ததால், அதற்கு ஈடாக மாளிகாவத்தையில் 37 எக்கர் காணியை வாங்குவதற்கு நிதியை திரட்டி இவர் வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவரது பெயரோடு சேர்ந்துள்ள எப்பன்தி Effendi என்ற சொல் கௌரவ என்ற அர்த்தத்தில் துருக்கி உதுமானிய பேரரசால் வழங்கப்பட்டதாகும்.
ஆங்கிலததில் 'சேர் ' என்ற பதத்தின் அர்த்தத்தை எப்பன்தி Effendi என்ற பதம் குறிக்கிறது.
தகவலுக்கு நன்றி......
ReplyDeleteBut some group may try to demolish claiming as it shirk.Destroying the monumental place is now going on for in the name of original Islam.Non Muslims group such as BBS too want to do this to deny the right Muslims and to eradicate historical right.Thaliban and ISIS are others that want to do this.Now those group who want to destroy this type of marks and religious place(shrine) must keep in mind that they are destroying the right of future generation.
ReplyDeleteSome group will go there and put green flag , insane sticks and a piggy bank and start to worship.., that's shirk. Can they deny this is not shirk ?
ReplyDelete