'வீட்டில் பிரச்சினை நடந்தால், ஒரே தடவையில் விவகாரத்து செய்வதில்லையே...'
ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானங்களை எடுக்கும் போது கட்சிகளை விட நாட்டையே முதன்மையாக கருதி செயற்படுகின்றனர் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பும் இணைந்து நாட்டை அபிவிருத்தியும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் இந்த முறையுடன் சகலரும் இணை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மோசடியாளர்களை கண்ட இடத்தில் கைது செய்து சிறையில் தள்ளாது, சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை.
வீட்டில் பிரச்சினை நடந்தால் ஒரே தடவையில் விவகாரத்து செய்வதில்லையே. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து கொள்வோம். இந்த அரசாங்கமும் அதேபோன்று பிரச்சினைகளை தீர்த்து கொள்ளும்.
நாம் மகிழ்ச்சியடையாத விடயங்களும் இருக்கின்றன. எனினும் அவற்றை சரி செய்து கொண்டு எங்களால் முன்னோக்கி செல்ல முடியும்.
தவறு செய்துள்ளனர் என்று தெரிந்ததும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். நாங்கள் அந்த முறையை ஏற்படுத்தவில்லை.
சட்டத்தையே நாங்கள் அமுல்படுத்தி வருகின்றோம். எவராக இருந்தாலும் அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம்.
குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் படைத்தளபதிகளுக்கு இப்படியானவற்றை செய்யும் போது அதனை முறைப்படி செய்யுமாறே ஜனாதிபதி கூறினார்.
தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கூறவில்லை. செய்வதை சரியான முறையில் செய்யுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment