Header Ads



றீட்டாவின் கவனத்திற்கு, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு முஸ்லிம்  அர­சியல் தலை­மைத்­து­வங்கள் எவ்­வித  தீர்வும் பெற்­றுத்­த­ராத நிலையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் இலங்­கைக்கு வருகை தந்­துள்ள சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவின் சிபா­ரி­சு­க­ளையே எதிர்­பார்த்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது. 

கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் ஐ.நா.காரி­யா­ல­யத்தில் RRT அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கும்; ஐ.நா.நிபுணர் ரீட்டா ஐசாக் நதே­யா­வுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பின்­போது தம்­புள்ளை பள்­ளி­வா­சலின்  சார்பில் அதன் நிர்­வாக சபை உறுப்­பினர் எம்.ஏ.ரஹ்­மத்­துல்லாஹ் கலந்து கொண்டு பள்­ளி­வாசல் பிரச்­சி­னை­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் பள்­ளி­வாசல் தொடர்­பான ஆவ­ணங்­க­ளையும் சமர்ப்­பித்­தி­ருந்தார். 

இதே­வேளை 2012 ஆம் ஆண்டு பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து  பள்­ளி­வா­சலைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்குப் போராடி வரு­கிறோம். இதற்­காக பல அர­சியல்  தலை­வர்­களை நாடியும் இது­வரை எது­வித பலனும் கிடைக்­க­வில்லை. அதனால் ஐக்­கிய நாடுகள் சபை இதில் தலை­யிட்டு தீர்த்துத் தர­வேண்­டு­மெ­னவும் கோரி­யி­ருந்தார். 

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு  இது­வரை பொருத்­த­மான  காணி­யொன்று வழங்­கப்­ப­ட­வில்லை. நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணி மது­பா­ன­சா­லைக்கு அருகில் அமைந்­துள்­ளதால் அக்­கா­ணிக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் பொது­மக்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளார்கள். 

இதே­வேளை புதி­தாக வேறோர் மாற்­றி­டத்தில் பள்­ளி­வா­சலை அமைப்­ப­தா­யி­ருந்தால் 2 ஏக்கர் காணியும் தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் வாழும் 17 குடும்­பங்­க­ளுக்கு வீடுகள் அமைப்­ப­தற்­கான காணி­களும் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென  பள்­ளி­வாசல் நிர்­வாகம் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு  அருகில் வாழும் குடும்­பங்­க­ளுக்கு மிகவும் குறைந்த தொகை நஷ்­ட­யீட்­டினை வழங்கி அவர்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் வெளி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

பள்­ளி­வாசல் நிர்­வாகம் அமைச்­சர்­க­ளான கபீர்­ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம்  ஆகி­யோ­ரி­டமும் முறைப்­பா­டு­களைச் சமர்ப்­பித்­துள்­ளன.

முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும்  தபால், தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஓர் இணக்­கப்­பாட்­டுடன் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக  உறுதியளித்துள்ளதாக  பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார் என்றாலும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதியிலே செயற்படுவதால் ஐ.நா.நிபுணரின் தயவை நாடவேண்டியேற்றபட்டதாகவும் தெரிவித்தார்.

 விடிவெள்ளி ARA.Fareel

No comments

Powered by Blogger.