குவைத்தில் மதுபான தொழிற்சாலை நடத்திய, இலங்கை பெண் கைது
குவைத்தில் மதுபான தொழிற்சாலை நடத்தி வந்த இலங்கை பெண் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பைஹாரா பகுதியில் செயற்பட்டு வந்த தொழிற்சாலையில் 10 கொள்கலன்களில் இருந்து 400 போத்தல்கள் மதுபானம், 13 குழாய்கள் மதுசாரம், மற்றும் மதுபான காய்ச்சுதலுக்கு தேவையான மூலப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பைஹாரா பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான தொழிற்சாலை இயங்குவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இலங்கை பெண் மதுபான தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றாரா என்பது தொடர்பில் கண்காணித்தன் பின்னரே அவரை ஆதாரத்துடன் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Post a Comment