Header Ads



'ஜனாதிபதி இப்படி, பேச முடியாது'

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தை கண்டிப்பதாகவும் அதனை நிபந்தனையின்றி விமர்சிப்பதாகவும் பிரஜைகள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்ககொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டு வர அளிக்கப்பட்ட 62 லட்சம் வாக்குகள் முழுமையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அளித்த வாக்குகள் அல்ல என்பதால், ஜனாதிபதி இப்படி பேச முடியாது.

முழு நாடும் கேட்கும் வகையில், குற்றம் சுமத்தப்பட்ட சிலரை நீதிமன்றத்திற்கு அழைத்தது தொடர்பாக அதிருப்தி வெளியிடுவதற்கு பதிலாக இன்னும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதவர்களுக்கு தொடர்பில் தீர்மானம் ஒன்றை ஜனாதிபதி எடுத்திருக்க வேண்டும்.

கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் கடற்படை தளபதிகள் இலங்கையில் பொதுச் சட்டத்திற்கு அடிப்பணிய வேண்டும். ஆனால் ஜனாதிபதி பேச்சில் அது புறந்தள்ளப்பட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டம் மூலம் கொண்டு வரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் விடயத்தில் ஜனாதிபதியோ பிரதமரோ தலையிட முடியாது எனவும் காமினி வியங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. I thought, my3 has resigned after the Night Club thuggery made by his son......

    ReplyDelete

Powered by Blogger.