'கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் குறித்து அதிருப்தி'
கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றி வரும் பேராசிரியர் டபிள்யு.எம் கருணாதாச விரைவில் மீள அழைக்கப்படவுள்ளார்.
பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டார் வாழ் இலங்கையர்கள் பலரினால் தூதுவரின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வானொலி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
இந்த முறைப்பாடுகள் குறித்து பல எச்சரிக்கை கடிதங்கள் தூதுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தொலைபேசி அழைப்பின் ஊடாக நான் இது பற்றி புகார் தெரிவித்திருந்தேன்.எனினும் தூதுவர் எனது அறிவுரைகள் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயற்படவில்லை. தொடர்ந்தும் அசமந்தப் போக்கினையே பின்பற்றியிருந்தார்.
எனவே அவரை மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment