நிதிமோசடி விசாரணைப் பிரிவு சட்டரீதியானது - நீதிமன்றம் அறிவிப்பு
இலங்கையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டரீதியானது என கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று -24- அறிவித்துள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு தம்மை கைது செய்ய சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் சரத் வீரவன்ச ஆகியோர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தை ஆராய்ந்த போதே கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இதனை கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டு, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை ஏற்படுத்தியுள்ளது.
எனவே நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டரீதியான நிறுவனம் எனவும் அதன் ஊடாக சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் எனவும் நீதவான் கூறியுள்ளார்.
Post a Comment