Header Ads



பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்காமை குறித்து, மங்கள வாய்திறந்தார்

ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள புனிததலம் தொடர்பாக யுனெஸ்கோவில் பலஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை விவகாரத்தில் இலங்கை அரசாங்கமானது தனது கொள்கையின் அடிப்படையிலேயே வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தது.  என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

இஸ்ரேல் - பலஸ்தீன் நெருக்கடியானது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுயாதீன பலஸ்தீன் நாட்டை உருவாக்க வேண்டும். இந்த நெருக்கடிக்கு இரண்டு நாடுகள் என்ற அடிப்படையிலேயே இலங்கையின்  ஆதரவு அமைந்திருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

ஒருசிலர் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால்  முஸ்லிம் மக்கள்  புத்திசாலிகள். உண்மைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும்   இடையிலான  வித்தியாசத்தை   முஸ்லிம்கள்  புரிந்துகொள்வார்கள்  என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து  வெளியிடுகையிலேயே  அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

7 comments:

  1. Just bluffing to fool Muslims. Any substance in his press brief?

    ReplyDelete
  2. போடா புண்ணாக்கு

    ReplyDelete
  3. UNESCO வினால் ஜெருசலம் சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட பிரேரனையை இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் உணர்வாளர்களால் திரிபு படுத்தப்படுகிறது.

    மறுபுறம் வங்குரோத்து முஸ்லீம் அரசியல் வாதிகளிளால் அரசியல் கோஷமாக்கப்படுகிறது

    முதலில் எமக்கு UNESCO என்றால் என்ன UNESCO வின் கடமை என்ன , UNESCOவினால் எந்த எந்த விடயங்களை செய்ய முடியும் என்ற தெளிவு தேவை.

    ஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சில் அல்லது மனித உரிமை ஆணையகம் இவற்றை தவிர ஏனைய ஐ. நா கட்டமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு நாட்டிற்கு எதிராத பிரேரனை நிரைவேற்றப்பட முடியாது.

    உண்மையில் UNESCO வில் கொண்டுவரப்பட்ட பிரேரனை என்ன

    கடந்த சில தினங்களுக்கு முன்பு UNESCO வினால் ஜெருசலம் சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட பிரேரனை

    ஜெருசலம் நகரும் அதனை சூழ உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் ஏனைய வணக்கஸ்தலங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல வேதங்கள் உரித்துக்கொண்டாடுகின்றன. யூதம், கிறிதவம் மற்றும் இஸ்லாம். எனவே இதன் புனிதத்தையும் புராதனத்தையும் கருத்தில் கொண்டு ஜெருசலத்தை இஸ்ரேல் இரானுவ ஆக்கிரமிப்பில் இருந்து தளர்த்தி புராதன பாதுகாப்புக்கு உற்படுத்தபட்ட நகராக பிரகடனப்படுத்துவது , அத்தோடு அந்த புனிதஸ்தலங்களுக்கு தொடர்ந்தும் புராதன அரபு பெயர்களைக் கொண்டே அழைக்கப்படடுவதால் அதன் புராதன தன்மை பாதுகாக்கப்படமுடியும். ஏன் என்றால் யூதர்களும் கிறிஸ்தவர்களும் தற்போது வேவ்வேறு பெயர்களை சூட்ட முற்பட்டிருக்கிறார்கள் இவ்வாறு வெவ்வேறு பெயர் கொண்டு அழைப்பதால் அதன் புராதன தன்மை புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதுவே இங்கு கொண்டுவரப்பட்ட பிரேரனை.

    இலங்கை இங்கு இப் பிரேரனைக்கு வாக்களிக்காமல் சென்றது உண்மை .

    இலங்கை முஸ்லீம்களுக்கு சொந்தமான இனையத்தலங்கள் அல்லது தமிழ் பத்திரிகைகள் சொல்வது போன்ற ஒரு பிரேரனை UNESCO வில் கொண்டுவரப்படவில்லை.

    UNESCO விற்கு இந்த தமிழ் பத்திரிகைகளும் இனையத்தளங்களும் , அஸ்வர் ஹாஜியார் போன்ற கோமாளிகள் கூறுவது போன்ற ஒரு பிரேரனையை கொண்டுவருவதற்கு எந்த உரிமையும் இல்லை அதிகாரமும் இல்லை.

    இங்கு இந்த பிரேரனை சம்பந்தமான கருப்பொருள் திரிபு படுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்படுகிறது.

    ReplyDelete
  4. அந்த உண்மைகளையும் சந்தர்ப்பங்களையும் எதிர்பார்துக்கொண்டுதான் உலகலாவிய முலு உம்மத்தும் இருக்கிறது..... It will Rise very soon

    ReplyDelete
  5. SRIlankan Muslims Behr support the double game policy if the government of Sri lanka

    ReplyDelete
  6. Hyder Ali, சரியான நேரத்தில் ஒரு புரிதலை துணிவுடன் கூறியதட்காக மிக்க நன்றி. வெறுமனே உணர்ச்சி வசப்படுவதை விட, நமது நாட்டின் வெளிவிவகாரங்கள் மற்றும் பிறநாடுகளுடனான பொருளாதார அரசியல் முன்னெடுப்புக்களையும் கருத்தில் கொண்டு கருத்துக்களை முன்வைப்பது சிறந்தது என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.

    ReplyDelete
  7. Ranil led UNP government is a wolf in sheep's clothing.

    ReplyDelete

Powered by Blogger.