"மஹிந்தவை பிரதமராக, நியமிக்க கோரிக்கை"
இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பெயரிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை குறித்து அவர் பேசினார்.
“தற்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பது ஜனாதிபதி கூறும் விடயங்களை தான். இன்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் உட்பட குழுவினரே அரசாங்கத்தை நடத்தி செல்கின்றனர்.
அப்படியென்றால் ஜனாதிபதிக்கு தான் இன்னமும் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் உள்ளன. இன்னமும் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவில்லை.
நிறைவேற்று அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஏன் அதனை பயன்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையினை ஜனாதிபதியினால் மேற்கொள்ள முடியும்.
அவர் ஜனாதிபதியாக இருப்பது எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. நாங்கள் 51 பேரும் அதற்கு எதிர்ப்பு அல்ல. எனினும் இந்த நாட்டின் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் கூற வேண்டும். அப்போது எங்களால் முழுமையான சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் என குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த விதமான ஒப்புதலும் இல்லாத தாமே தமக்கு பெயர் சூட்டிக்கொண்டுள்ள இந்த கூட்டு எதிர்கட்சி என்ற பெயரில் இந்த நாதாரிகள் படுத்துகின்ற பாடுகள் சொல்லமுடியாத தொல்லை கொடுக்கின்ற ஒரு நரிக்கூட்டம்.
ReplyDeleteஇவர்கள் சொல்கின்ற இந்த ஜனாதிபதி இவர்கள் வாக்கு போட்டு வந்தவர் அல்ல ( இதில் அரைவாசி தற்போது அரசாங்கத்தின் சார்பாக உள்ளனர் ) அதேநேரம் இந்த ஜனாதிபதிக்கு எதிராக எவ்வளவு சூழ்ச்சி செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்த சூழ்ச்சியாளர்கள்.
நடந்த 2015 தேர்தலில் வெறும்37.2% பெற்ற இதில் அரைவாசி தற்போது அரசாங்கத்தின் சார்பாக உள்ளனர் இந்த நாதாரிகள் முழுமையான UPFA அரசாங்கம் அமைப்பர்களாம் அல்ல அமைப்போமாம். இவர்களை ஆரம்பமுதலே மடக்கி வைத்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. இதற்கு தற்போதைய ஜனாதிபதியும் பிரதமருமே முழுபொறுப்பையும் ஏற்கவேண்டும்.
Hope MY3 will not dig his own grave!
ReplyDeleteCTB BUS TIKA MAHINDAGE RESVEEM WALATA NIKAM DEELA CTB EKA BANKALOTH KARAPU TAMUSE KIWWA KIYALA KOHOMADA MAHINDATA AGAMETIKAMA DENNE. GIYA METIWARANAYEN UNP106 SANDANE95 OY TAMUSETA MOLE KIYALA DEYAK NEDDA? NIKAM MENTLE KATHA KIYANNA EPA.
ReplyDelete