Header Ads



புனித கபாவுக்கு மாற்றப்பட்ட புதிய துணியில், யெமன் முனையில் முதல்முறை தங்க தையல் வேலைப்பாடு


புனித கஃபாவை போர்த்தும் புதிய கிஸ்வா துணி மாற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாற்றப்பட்ட புதிய துணியில் காஃபாவின் யெமன் முனையில் முதல் முறை தங்க தையல் வேலைப்பாடுகளுடனான கோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

கஃபாவின் நான்கு முனைகளில் அதன் தெற்கு பகுதியிலேயே யெமன் முனை உள்ளது. இதில் கிஸ்வாவின் மேல் பாகத்தில் இருக்கும் எழுத்தணியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

22 மில்லியன் சவூதி ரியால் (5.8 மில்லியன் டொலர்) செலவில் உருவாக்கப்படும் கிஸ்வா, தூய பட்டு மற்றும் தங்க நூல்களால் தயாரிக்கப்பட்டதாகும்.

மக்காவில் இருக்கும் பிரத்தியேக தொழிற்சாலை ஒன்றில் 240 தொழில்நுட்ப நிபுணர்கள், நெசவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கெண்டே கிஸ்வா துணி உருவாக்கப்படுகிறது.

கிஸ்வா 658 சதுர மீற்றர்கள் கொண்டதாகும். 47 துண்டுகளாக உருவாக்கப்பட்டு கஹ்பாவின் அனைத்து பாகங்களையும் போர்த்தும் வகையில் இணைக்கப்படுகிறது.

கஃபாவுக்கு ஒவ்வொரு ஆண்டின் அரபா தினத்திலும் புதிய கிஸ்வா அணிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் யாத்திரிகர்கள் அரபாவில் ஒன்றிணைவதால் மக்கா பெரிய பள்ளிவாசல் வழக்கமாக காலியாகவே இருக்கும். 

No comments

Powered by Blogger.