அமெரிக்க கத்தலிக்க தேவாலயத்தை, விலைக்கு வாங்கிய முஸ்லிம்கள்..!
அமெரிக்காவில் கத்தோலிக்க கிறிஸ்துவ அறக்கட்டளையின் கடனை அடைப்பதற்காக, அந்த அமைப்புக்குச் சொந்தமான தேவாலயம் அமெரிக்க முஸ்லிம் அமைப்புக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பென்சில்வேனியா மாகாணம், பிரிஸ்டல் நகரில் அமைந்துள்ள தூய மேரி அன்னை கத்தோலிக்க தேவாலயம் கடந்த வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க முஸ்லிம் சங்கம் அந்த தேவாலயத்தை 17.75 லட்சம் டாலர் (சுமார் இந்திய ரூ.11.8 கோடி) விலை கொடுத்து வாங்கியது.
அந்த தேவாலயத்தை நிர்வகித்து வரும் தூய மேரி அன்னை அறக்கட்டளையும், அந்தத் தேவாலயம் அண்மையில் இணைக்கப்பட்ட "பிரபஞ்சப் பேரரசி' அமைப்பும் வாங்கியுள்ள 9.6 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.4 கோடி) கடனை அடைப்பதற்கு இந்தத் தொகைப் பயன்படுத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், எஞ்சியுள்ள தொகை உள்ளூர் கத்தோலிக்க கிறிஸ்துவ சமூகத்தினருக்கான நலப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தூய மேரி அன்னை தேவாலயம் மூடப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Alhamdhulillah !
ReplyDelete