Header Ads



தடுமாறும் மைத்திரி, முக்கிய அமைச்சர்களுடன் இரவில் பேச்சு, பூஜித்தவுடன் சீறிப்பாய்ந்தார்

மேல் மாகாணத்தின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸாரை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்த காரணத்தினால் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான சட்டம், ஒழுங்கு அமைச்சை கையேற்றுக் கொள்ளவுள்ளதாக 13-10-2016 நண்பகல் தொடக்கம் ஒரு தகவல் பரவியிருந்தது.

இந்நிலையில்  மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸாரைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க உத்தரவிட்டிருந்தார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்தி இலங்கை முழுவதும் காட்டுத்தீ போல பரவி ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே 13-10-2016 இரவு முக்கிய அமைச்சர்களை கலந்தாலோசனையொன்றுக்கு அழைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால, அதற்கு முன்னதாக பொலிசாரின் தயார் நிலை உத்தரவு குறித்து பொலிஸ் மா அதிபரை கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரின் தயார் நிலை உத்தரவு பின்னிரவு பதினொரு மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. முன்னாள் எகிப்தின் ஜனாதிபதி முர்ஸியைப்போல, மைத்ரி ஓர் அப்பாவியாக தென்படுகிறார்.

    முன்னாள் ஜனாதிபதி முர்சி நல்லவராக இருந்தார். ஆனால், வல்லவராக இருக்கவில்லை. அதனால், தனது பதவியைத் தொலைத்தார்.

    அவர் வழியில், மைத்திரியும்?????

    ReplyDelete
  2. He cannot control his son; he is trying to control others.....

    ReplyDelete

Powered by Blogger.