மோசடியில் பிரதமருக்கு தொடர்பு
பிரதமர் ரணிலின் தூண்டுதலுக்கு அமையவே அர்ஜூன் மகேந்திரன் ஊழல்களில் ஈடுபட்டார் மேலும் ரணிலுக்கு எதிராக ஆதாரங்களை கொண்டுவர நான் தயாராக இருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக தெரிவித்தார்.
இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
'ரணிலின் தூண்டுதலின் அடிப்படையிலேயே நான் ஊழல்களில் ஈடுபட்டேன்" என்பதை அர்ஜூன் மகேந்திரன் கோப் ஆணைக்குழு விசாரணையின் போது வெளிப்படையாக தெரிவித்தார் ஆனாலும் இது திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது.
விசாரணையின் போது கூறப்பட்ட உண்மைகள் மறைக்கப்பட்டன. இதன் மூலம் மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழலின் பிரதமருக்கும் தொடர்பு இருக்கின்றது என்பது உறுதியாகின்றது.
மத்திய வங்கியில் ஊழல் இடம் பெற்றுள்ளது என்பது கணக்காளரின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் விசாரணைகள் இன்றும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றது.
அதே போன்று இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியின் முன்னிலையில் தனது பதவியினை பெற்றுக்கொள்ளும் போது 'இந்திரஜித் நீங்கள் யாருடைய அச்சுருத்தலுக்கும் பயப்பட வேண்டாம் பதவியைத் தொடருங்கள்" என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதன் மூலம் பிரதமரை மையப்படுத்தியே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார், என்பதும் தெளிவாக புலப்படுகின்றது எனவும் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
இதேவேளை டில்ருக்ஸி டயஸ் சுயாதீனமான ஒருவர் அல்ல அவர் பிரதமரின் தேவைக்கேற்ப செயற்படும் பெண் ஒருவர் மட்டுமே அவர் பிரதமரின் கையாள் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரணை செய்யப்படவில்லை. இவற்றின் பின்னணியில் இருப்பவர் ரணிலே இந்த விடயங்கள் ஜனாதிபதிக்கும் தெரியும் ஆனால் அவர் வெளிப்படுத்துவது இல்லை.
இதன் காரணமாக நல்லாட்சியின் பலம் தற்போது குறைந்து விட்டது. இந்த நிலையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டால் அவர்களுக்கு தோல்வி ஏற்படுவது நிச்சயம் அதனாலேயே எல்லை நிர்ணயம் என்ற போலியான காரணத்தை முன்வைத்து தேர்தலை தள்ளிப்போட்டுக் கொண்டு வருகின்றார்கள் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எப்படியான ஆதாரங்கள் உங்களிடம் உண்டு முன்னால் unp செயலாளர் திஸ்ஸ அதநாயக உருவாக்கிய பேப்பர்கள் போன்ற? தற்றபோது அவர்கள் உங்களின் திருட்டு வேளைகளை ஆராய்ந்து கண்டுள்ளார்கள் அதே போன்று உங்களின் ஆட்சியில் அவர்களின் திருட்டுவேளைகளை கண்டுபிடித்து நாங்கள் அனைவரும் திருடர்களே என்று மக்களுக்கு பிரகடன படுத்திக்கொள்ளவும் மிக நன்றி
ReplyDeleteWala payai goda payai inna wasudeewa nanayakkara boru begal nokiya pinak dahamak karagena gedarata wela innawa.boru kiyala apayata yanne netiwa.
ReplyDelete