ரஞ்சனுக்கே இப்படியென்றால்..?
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஜப்பான் விஜயம் ஒன்றை நிறைவு செய்துக் கொண்டு அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்வனவு செய்த தீர்வை வரியற்ற தொலைக்காட்சி ஒன்றின் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தெளிவுபடுத்திய பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,
ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா ஒன்றில் இணைந்து கொண்டு மீண்டு நாடு திரும்பிய வேளை, தனது செயலாளர்களுக்கு தொலைப்பேசி அழைப்பொன்று ஏற்படுத்தி என்ன கொண்டு வர வேண்டும் என கேட்டேன். அவர்கள் தொலைக்காட்சி பழுதடைந்துள்ளதாக கூறியமையினால் தீர்வை வரி அற்ற கடையொன்றில் தொலைக்காட்சி ஒன்றை கொள்வனவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தொலைக்காட்சியை கொள்வனவு செய்து வீட்டிற்கு கொண்டு வந்ததன் பின்னர் பயண சோர்வு காரணமாக தான் சற்று உறங்கியதாகவும், உறங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சியில் பொருத்த வேண்டிய பகுதிகளை பொருத்துமாறு செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.
எப்படியிருப்பினும் தான் உறக்கத்தில் இருந்து எழுந்த பின்னர் குறித்த தொலைக்காட்சி அந்த கடையின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி என செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தான் அந்த கடைக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை வழங்கி பழைய தொலைக்காட்சிகளை மக்களை விற்பனை செய்கின்றீர்கள் என வினவிய போது, சிறிய தவறு ஏற்பட்டதாகவும், புதிய தொலைக்காட்சி ஒன்றை வழங்குவதற்கு பழைய தொலைக்காட்சியை மீண்டு அனுப்பி வைக்குமாறு கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
தான் அதற்மைய கட்டுநாயக்கவில் உள்ள குறித்த கடையில் தொலைகாட்சியை வழங்குமாறு செயலாளர்களுக்கு அறிவித்ததாகவும், அவர் தற்போது கொண்டு சென்று கொடுத்த போதிலும் இதுவரையில் புதிய தொலைக்காட்சி ஒன்று கிடைக்கவில்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குழப்பம் காரணமாகவே தனக்கு கோப் அறிக்கையில் கையொப்பமிட செல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி கொண்டு வரப்பட்ட பெட்டியை திறந்ததன் பின்னர் அதனை பொருத்துவதற்கு அவசியமாக ஆணி காணப்படவில்லை எனவும், அதற்கு ரிமோட் வழங்கப்படவில்லை எனவும் குறித்த தொலைக்காட்சியை பொருத்திய செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment