கனடா, பிரான்ஸ், கட்டார் நாடுகளில் இனச்சுத்திகரிப்பை நினைவுகூர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் பலாத்கார இனசச்சுத்திகரிப்புக்கு உள்ளான முஸ்லிம்கள் 26 ஆவது வருட கறுப்பு ஒக்டோபர் நிகழ்வுகள் கனடா பிரானஸ் மற்றும் கட்டார் நாடுகளில் நேற்று 30 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் அந்தந்த நாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.
பிரான்ஸில் பிரதான நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனை சர்வதேச வாழ் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் லண்டன், ஜேர்மனி, நோர்வே, சுவிஸ் பிரான்ஸ் வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களும், வடக்கு முஸ்லிம்களும் கலந்துகொண்டனர்.
கனடா
கட்டார்
Post a Comment