கிழக்கு மாகாண சபை, இஸ்ரேலுக்கு ஆதரவானதா..?
-எம்.ஏ.அன்ஸில்-
முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஷா மற்றும் ஜெரூசலம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கும், சுதந்திரமான வழிபாட்டுக்கும் எதிராக வன்முறையாக செயற்படும் இஸ்ரேல் ரானுவத்தினரை கண்டித்து ‘யுனஸ்கோ’ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரனையில், இலங்கை வாக்களிக்காமல் விலகி நின்றமையினை எதிர்த்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கண்டனப் பிரேரனை, கிழக்கு மாகாண சபையின், சபை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமல் போனமை மிகவும் துரதிஷ்டவசமானதாகும் என்பதோடு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது கண்டனத்தினை தெரிவிக்க வேண்டிய விடயமுமாகும்.
சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும்கட்சியின் அங்கமாக இருக்கின்ற இன்றைய பாராளுமன்ற சமநிலையில், அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசாங்கமான இந்நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேல் தூதுவராலயத்திற்கு சென்று கையொப்பமிட்ட போதிலும், இஸ்ரேலுக்கெதிரான ‘யுனஸ்கோ’வின் பிரேரனை மீதான வாக்கெடுப்பில் இந்நல்லாட்சி அராசாங்கம் வாக்களிக்காது முழு முஸ்லிம் ‘உம்மா’வுக்கு எதிராக செயற்பட்டபோதிலும், ஓரிருவரைத் தவிர வேறு எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் வாய்திறந்து பேசியிருக்கவில்லை.
இந்நிலையில், தனி நபர் பிரேரனை ஒன்றை இந்நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கெதிராக முன்வைத்த மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஆரிப் சம்சுடீன் பாராட்டுக்குறியவர் என்பதோடு அவருக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்டது கிழக்கு மாகாணம் மட்டும்தான். முஸ்லிம்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த சாத்தியமிருக்கின்ற ஒரேயொரு மாகாண சபையும் அது ஒன்றே என்பதனால்தான், கடந்த மாகாண சபைத்தேர்தலில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெறவேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர்.
ஆனால் அது அடையாளத்திற்கான வெறும் பெயர்தாங்கி முஸ்லிம் முதலமைச்சராக இருந்து, முஸ்லிம் சமூகத்திற்காக இவ்வாறhன விடயங்களில் அவர் செயற்படாது விட்டால், அந்த முஸ்லிம் முதலமைச்சர் இருப்பதை விட, அப்படி ஒருவர் இல்லாதிருப்பதே மேலானதாகும்.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கென கட்சி ஒன்றை ஆரம்பித்து செயற்படுவதற்கு முன்னரே வெறும் இருபது வயது இளைஞராக இருந்த காலத்திலேயே சர்வதேச முஸ்லிம் சமுதாயம் பற்றிய பிரக்ஞையோடு செயற்பட்டவர் மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள்.
1969ஆம் ஆண்டு மஸ்ஜிதுல் அக்ஷா தீக்கிரையாக்கப்பட்டபோது, அதற்கெதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்து, தானே தலைமையேற்று நடாத்தி, தனது சர்வதேச முஸ்லிம் சமுதாயத்தின் ஓர் அங்கமான பலஸ்தீன முஸ்லிம்களுக்காக செயற்பட்டவர் அவர்.
இதன்மூலம் இலங்கை முஸ்லிம்கள் சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஓர் அங்கம் என்பதனையும், சர்வதேச முஸ்லிம் உம்மத்திற்கெதிரான செயற்பாடுகளுக்கெதிராக போராட வேண்டியது இலங்கை முஸ்லிம்களின் கடமையாகும் என்பதனையும் பறைசாற்றி நின்றவர் மாமனிதர் அஷ்ரப் அவர்கள்.
அவ்வாறான போராட்ட குணத்தினை விதைத்துவிட்டுச்சென்ற மாமனிதரின் கட்சி ஆட்சியிலிருக்கின்ற மாகாண சபையில், இஸ்ரேலுக்கெதிராக செயற்படுவதினின்றும் விலகிய இந்நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டிக்கும் வகையிலான பிரேரனை, பத்து நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருந்தும்கூட, அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்க்காது மறுதலிக்கப்பட்டமையை எதிர்ப்பதற்கு திராணியற்று இருந்தமையானது, தமது சமூகத்திற்காக செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாதபோதிலும், அதுபற்றி சபையில் சகோதரர் ஆரிப் சம்சுடீன் அவர்கள் கேள்வி எழுப்பியபோது, அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்காக ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினரைத் தவிர வேறெவரும் ஆதரவு வழங்கவில்லை என்பதும், அரசாங்கத்தின் கொள்கைக்கெதிரான விடயத்தினை விவாதத்திற்கு எடுக்க முடியாது என கட்சி உறுப்பினர்களை முதலமைச்சர் சமாதானப்படுத்தினார் என்பதும் மிகவும் பாரதூரமான விடயங்களாகும்.
அதேவேளை, மதியத்திற்கு பின்னரான அமர்வில் இப்பிரேரனை எடுக்கப்பட இருந்ததாகவும் அதற்கான கோரம் சபையில் காணப்படவில்லை எனவும் தெரிவக்கப்படுகிறது. கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இவ்விடயத்தில் அக்கறையோடு செயற்பட்டிருந்தால் கோரம் இல்லாமல் போகுமளவு வாய்ப்பிருந்திருக்காது.
ஆக, இவ்விடயத்தில் முதலமைச்சர் தனது விளக்கத்தினை பகிரங்கமாக வாக்களித்த மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சியின் கொள்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் வாக்களித்த மக்கள் சார்பாக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
அக்ஸாவை தீயிட்ட கரங்களெல்லாம்
அழிந்தால் தான் கண்களினைத் தூக்கம் சேரும்
இக்காலம் நாமெல்லாம் விழித்துக்கொண்டோம்
இனி யெம்மை சாடுபவர் சாம்பலாவார்
அக்காலம் தொட்டே நாம் பாதுகாத்த
அக்ஸாவும் நெருப்பினிலே எரியும் போது
கக்காத கனலையுமே கக்கும் நெஞ்சம்
காதுகளில் போர் முரசம் கேட்கும் நாளை
ஈட்டியின் முனைமீது வளர்ந்த நாங்கள்
இன்றேனோ கோழைகளாய் மாறிப்போனோம்?
பூட்டியே நாம் குர்ஆனை இற்றை நாளும்
புதுக் கொள்கை தேடியதால் தாழ்ந்து போனோம்
தீட்டுவதால் ஈமானை நாளும் நாமும்
திறன்மிக்க வீரர்களாய் மாறிப்போவோம்
ஓட்டிடுவோம் யூதரினை பலஸ்தீன் விட்டு
ஓதிடுவோம் ஆழ்ழாஹ{ அக்பரென்றே
.
மாமனிதர் அஷ்ரப்
-1969 - புதுமைக் குரல்
மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் மீண்டும் ஒரு முறை முயற்சித்தால் அது சிறந்ததொரு பெறுபேற்றைக் கொண்டுவரலாம்.
ReplyDeleteஆகக் குறைந்தது சகோதரர் அன்ஸில் அவர்களின் இவ்வாக்கம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களின் நிலைமைகளையும் முஸ்லிம்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுகிறது.
முஸ்லிம்கள் தமது எதிர்கால அரசியல் தலைவர்களை எந்த தகுதியின் அடிப்படையில் இனிமேல் தெரிவு செய்ய வேண்டும் என்பதையும் அது உணர்த்துகிறது.
Eastern CM has to learn many things from the northern CM when it comes about society.
ReplyDeleteIt's a shame out and out to the eastern provincial council.