Header Ads



கூடியிருந்தவர்களின் கரகோசத்துடன், இந்தோனேஷியாவில் பிரம்படி தண்டனை


உள்ளூரில் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் இந்தோனேஷியாவின் அசே மாகாணத்தில் கூடி இருந்தவர்களின் கரகோசத்திற்கு இடையில் மற்றும் சில இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரம்படி தண்டனைக்கு முகம்கொடுத்தனர்.

மாகாண தலைநகரான பண்டா அசேவின் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருக்க, 21 முதல் 30 வயதுடைய ஆறு பெண்கள் மற்றும் ஏழு ஆண்களுக்கு கடந்த திங்களன்று பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.

திருமணமாகாதவர்கள் தொடுவது, கட்டியணைப்பது மற்றும் முத்தமிடுவது போன்ற தடை செய்யப்பட்ட முறையில் நெருக்கமாக உறவாடியதாகவே ஆறு ஜோடிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முறையற்ற உறவுக்கு வழிவகுக்கும் வகையில் மறைவான இடத்தில் எதிர்பாலினருடன் நேரத்தை செலவிட்டதாகவே ஏழு ஆண்களுக்கு பொது இடத்தில் தண்டனை வழங்கப்பட்டது.

இதில் 22 வயது பெண் ஒருவர் பிரம்படி தண்டனைக்கு உள்ளாகவேண்டி இருந்தபோதும் கர்ப்பமுற்றிருப்பதால் அந்த தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. அவரது சந்தர்ப்பம் வரும்போது இளம் தாய்க்கு தண்டனை வழங்கப்படும் என்று அசே துணை மேயர் செய்னல் ஆரிபீன் குறிப்பிட்டார்.

2001 ஆம் ஆண்டு பிரத்தியேக தன்னாட்சி அதிகாரம் பெற்றதை அடுத்தே அசேவில் சரிஆ சட்டம் அமுலுக்கு வந்தது.

பிரிவினைவாத மோதலை தணிக்கவே இந்தோனேஷிய மத்திய அரசு அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி வழங்கியது. 

5 comments:

  1. இஸ்லாமிய சட்டம் கடுமையானதல்ல; மாறாக, உங்கள் அறியாமைதான் கொடுமையானது!

    ReplyDelete
  2. ஷரியா சட்டத்துக்கு நானும் அடிமை ஆனால் முதலில் மக்களுக்கு எது சரி எது பிழை என்று சொல்லி காட்டி இஸ்லாமிய அறிவு புகுத்த வேண்டும் அப்படியில்லாமல் திடீர் என்று ஷரியா சட்டம் அமுல் படுத்தினால் மக்களுக்கு ஒரு அதிருப்தி எட்படும்.

    ReplyDelete
    Replies
    1. bull bull எது சரி எது பிளை என்று சொல்லாமலா இருப்பார்கள்?

      Delete
  3. இப்ப வந்திடுவாங்களே பெண்ணிலைவாதிகள் காமன்ட் பன்ன.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க bro

      Delete

Powered by Blogger.