'றிசாத் பதியூதினை, தமிழ் கூட்டமைப்பு அனுமதிக்காது' - யோகேஸ்வரன்
அமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர் அபிவிருத்திக் குழுவில் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டது எனவும் தெரிவித்துள்ளது.
இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பனிச்சையடி அருள்மிகு வீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பத்திரகாளியம்மன் ஆலய திறப்பு விழா இன்று(21) காலை நடைபெற்ற போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் அரசியலை மையமாக வைத்து சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளில் இருந்து பெருமளவான நிதிகள் குவிந்தன. அந்த நிதிகளில் பெரும்பாலானவை தென் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போதைய நிலையில் வட கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வமாக செயற்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் அதன் பிரதிநிதிகளை மாவட்ட பிவிருத்திக் குழுவில் நியமித்தார்கள். மாவட்ட அபிவிருத்தியினை அவர்கள் திட்டமிட்டு செயற்படுத்தினார்கள்.
ஆனால் தற்போதுள்ள நல்லாட்சியில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்துள்ளன. இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்னும் பதவி தலைவர்கள் என்ற மாற்றப்பட்டுள்ளது. பலர் உருவாகிவிட்டனர். மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருக்கலாம். ஆனால் இன்று ஒரு கட்சியின் பிரதேச உறுப்பினர் கூட மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருக்கலாம் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
துரதிஸ்டவசமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு அபிவிருத்திக்குழு தலைவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். அவர்களில் மூன்று சகோதர இனத்தை சேர்ந்தவர்களும் ஒரு தமிழரும் உள்ளனர். 75 வீதமுள்ள தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. 25 வீதமுள்ள சகோதர இனத்தவர்களுக்கு மூன்று பிரதிநிதிகள் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இங்கு உள்ளனர். அந்த கட்சியை சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர். மன்னாரை சேர்ந்த றிசாத்பதியூதின் வந்து இங்கு எமக்கு அபிவிருத்தி செய்ய தேவையில்லை. அவர் அமைச்சராக இருந்துவருகின்றார். அவர் இலங்கைக்கான அமைச்சராகவுள்ளார். தனது ஒதுக்கீடுகள் மூலம் இந்த மாவட்டத்திற்கு எதனையும் செய்யவிரும்பினால் செய்யலாம். அதற்காக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கூட்டத்தில் பங்கு கொண்டு ஆலோசனை வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிறைவான ஆதரவினை வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம். அந்த எதிர்ப்பினை வெளிக்காட்ட தயாராகவும் இருக்கின்றோம். இது தொடர்பில் சம்பந்தன் ஐயாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். அமைச்சர் றிசாத்பதியூதின் இங்கு வந்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக செயற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் அனுமதிக்காது என்றார்.
ரிசாத்தின் அதிகாரப்பசிக்கு அளவில்லை.தமிழர்குறித்து இனத்தூவேசம் பேசுவதும் தமிழர் வளங்களை அபகரிப்பதுமே அவர் வேலை.
ReplyDeleteவடகிழக்கு தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சுப்பதவிகளை பெற்று புளைப்பு நடத்தும் முஸ்லீம் அரசியல் வாதிகள் தமிழர் தீர்வை குழப்புவதன் காரணம் என்னவென்றால் தமிழர்க்கு தீர்வு கிடைத்தால் அவர்கள் எதிர்பு அரசியலை கைவிட்டு விட்டு அரசுகளில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்படும் அப்போது தமிழர்கணக்கில் அங்கம் அனுபவிக்கும் அமைச்சு பதவிகள் கிடைகாமல் போகும்.இதானாலேயே ரிசாத் போன்றவர்கள் துவேசம் பேசி திரிகின்றனர்.
ReplyDeleteதமிழ் கூத்தமைப்பில் உள்ள எவனும் துவேசம் பேசுவதில்லையா? ரிஷாட் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக பேசுவதை துவேசமாக காட்டுகின்றது இந்த பாழாய் போன தமிழ் தீவிரவாதம். உங்க கூட்டத்திற்கு யார் அரசில் அங்கம் வைத்து அமைச்சு பதவிகளை பெற வேண்டாம் என்றது? அவர்களுக்கு ஈழம் சுய நிர்ணயம் எனும் காலாதிவாதி சிந்தனையை தூக்கி பிடிக்காவிட்டால் அரசியல் பண்ணவும் முடியாது டயஸ்போறாக்களின் எலும்பு துண்டுகளை கொண்டு வயிற்றை கழுவமும் முடியாது. இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் சேவை என்கிற விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் முன்னாள் பூச்சியங்களாகவே உள்ளனர்.
Deleteஎன்னமோ தமிழர் தீர்விற்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் மட்டும் தான் இடைஞ்சல் முஸ்லீம் மக்கள் இல்லையென்று கூறுவது தமிழ் தீவிரவாதத்தின் முட்டாள் தனம். கிழக்கிலும் வடக்கிலும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமிற்கும் தெரியும் தமிழ் தீவிரவாதிகளின் உண்மை முகம். ரிஷாட் போன்ற அரசியல்வாதிகள் உருவாக தமிழ் தீவிரவாதிகள் தானேகாரணம். யுத்தத்தை சாக்காக வைத்து ஐரோப்பா நாடுகளுக்கு ஓடி ஒளிந்து தன் வயிற்றை வளர்த்துக்கொண்டு ஒரு மூளையிலிருந்து தேசியம் பேசும் தமிழ் தீவிரவாதிகளை விட எந்த தீவிரவாதம் தன்னை அகதியாக்கியதோ அந்த தீவிரவாதத்தின் முன் தன் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை நிமிர்ந்து வாழ வைக்க முயற்சி செய்யும் ரிஷாட் எல்லாவிதத்திலும் சிறந்தவர். உம்மை போன்ற றிஷாடையோ முஸ்லிம் தலைமைகளையோ விமர்சனம் செய்ய தமிழ் காட்டுமிராண்டிகளுக்கு எந்த அருகதையும் இல்லை
Delete@IR MS ரிசாத் மீள்குடியேற்ற மாட்டார்.மீள்குடியேற்றம் முடிந்தால் அவர் இனதுவேச அரசியல் செய்யமுடியாது.பழையபுண்ணை காட்டி காட்டி பிச்சை எடுப்பதைபோல அவர் அரசியல் தொடரும்.
Deleteநீங்களும் தமிழரைதுற்றி தூற்றி அவருக்கு வாக்களிப்பீர்கள்.
Mr.Kumaran you cannot get any solution as long as you vomit venom of racism. Can you expect Muslims allow your long dreamed impossible merger of north and east?
DeleteWhat have you achieved by your long run so-called struggle?
What remains for you except loss of lives, loss of economy and becoming refugees and homeless.
You look with jelous of Muslims for their well-being.
Mr.Kumaran you cannot get any solution as long as you vomit venom of racism. Can you expect Muslims allow your long dreamed impossible merger of north and east?
DeleteWhat have you achieved by your long run so-called struggle?
What remains for you except loss of lives, loss of economy and becoming refugees and homeless.
You look with jelous of Muslims for their well-being.
ஆஹா, தமிழ் அர,வாதிகளால் மாத்திரம் என்ன நடக்கிரதாம்?, முன்னாள் போராளிகள் என்னும் பளுத்த புண்ணைதானே வைத்து வெளிநாடுகளில் பிச்சை எடுக்கப்படுகிறது,
Deleteஇதற்கு சொந்தநாட்டரசிடம் இளக்க செய்யப்பட்டதை கேட்பது பலமடங்கு சிறந்தது
MR CADER ZAINUDEEN வடகிழக்கு இணைப்பை முஸ்லீம்கள் தடுக்க முடியும்.ஆனால் அதனுடன் எல்லாம் முடிந்துவிடாது.
Deleteகிழக்கு இணைக்கபடவிட்டால் கிழக்கு தமிழர்களை எப்படி பாதூகாப்பது என்று எமக்கு தெரியும்.ஆனல் அதன் பிறகு தமிழர்களை தமிழ்பேசும் சகோதரர்களாக பார்க முடியாது.உங்களுக்கு அரசியல் கற்று தந்தவர்கள் நாங்கள் உங்களை விட சிறப்பாக சலூகைகளை பெறுவோம். தீட்டிய மரத்தில் கூர்பார்க நினைக்க வேண்டாம்.
இனவாதம்என்றால் என்னவென்று படித்து அறியும் சும்மா தமிழர் இனவாதி,பயங்கரவாதி என்று கத்தாதே
தன் சமுதாயத்தை பிச்சையெடுக்கவைத்த தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு அரசியல் படித்துக்கொடுத்தனராம்.:D முதல்ல காலாவதியான சித்தான்தங்களை தூக்கி போட்டு மக்களுக்கு உருப்படியா ஏதாவது ஒரு விடயத்தை செய்துகொடுங்க ரிஷாட் சொன்னதை போல் பிச்சைகாரன் தன் புண்ணை காட்டி பிச்சையெடுப்பதை போல் தமிழ் தேசியம் புடலங்கா தேசியம் என்று அப்பாவி தமிழர்களை உசுப்பேத்துவதை தவிர முட்டாள் தமிழ் அரசியல் இலங்கையில் அப்படி எதை கிழித்துவிட்டது?
ReplyDeleteநீங்கள் மட்டும் உங்கள் அரசியல் வாதிகளால்என்ன சாதிச்சனீங்க.
Deleteகட்டி முடிக்கப்பட்ட வீடுகளைகூட குடுக்க முடியேல்ல.மைதானத்துக்கும்,பாடசாலைக்கும் ஆப்பு வச்சுடாங்கள்.அளுத்கம தர்க நகர்ல மூஸ்லீம் வியாபாரிகள்ட யாரும் வியாபாரம் செய்யமாட்டம் எண்டு ஒதுக்கீட்டாங்கள்.நீர் இப்படியே குலைச்சு கொண்டு இரும்.
தனித்துவம் என்ட பெயரில் உங்களை தனிமை படுத்திவிட்டார்கள்,ஹுஹீ