உலகிலேயே மிகக்கடினமான, மனிதாபிமான நிவாரண முயற்சி
இராக்கில் உள்ள மொசூல் நகரை கைப்பற்றுவதற்கான போர் தொடங்கும் போது, உலகிலேயே மிகக்கடினமான மனிதாபிமான நிவாரண முயற்சி நடவடிக்கை ஒன்றில் ஈடுபட தாங்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக அங்குள்ள ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினர் மீது பெரிய தாக்குதல் ஒன்றை இராக் அரசு படையினர் விரைவில் தொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக, மொசூல் நகரிலிருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வெளியேறும் சூழல் உண்டாகும் என்றும், மேலும் பலரை, ஐ.எஸ் அமைப்பினர் கேடயமாக பயன்படுத்த கூடும் என்றும் மூத்த ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
அது பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
Post a Comment