"பயில்வான் இலேகியம் திண்டவன் போல் வீரம் பேசுவது"
சிறுபான்மை மக்களுக்கு அநியாயம் செய்வதற்காகவே தேர்தல் திருத்தத்தை கொண்டு இரு பெரும் கட்சிகளும் முயற்சிக்கின்றன என்று கூறும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்த அநியாயத்தை எதிர்க்குமுகமாக பாராளுமன்றத்தின் எதிர்த்தரப்பிற்கு செல்ல வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
தேர்தல் திருத்தம் சம்பந்தமாக பிரதி அமைச்சர் ஹரீசின் உரை சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ள நிலையில் தேர்தல் சீர்திருத்தம் என்பது அவசியமற்றதாகும் என்பதே உலமா கட்சியின் தெளிவான நிலைப்பாடாகும்.
கடந்த மஹிந்த ஆட்சியின் போது இனவாத கட்சியான ஹெல உறுமயவின் கட்டாயத்தின் பேரில் தேர்தல் திருத்தம் முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போது அரசுக்கு ஆதரவு என்ற நிலையிலும் உலமா கட்சி அதனை கண்டித்தது. இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை கிடப்பில் போட்டார். ஆனாலும் இதனை நாம் ஏற்கவில்லை என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணமும் பதவியையும் பெற்றுக்கொண்டு இத்திருத்தத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கை உயர்த்தினார்கள்.
தற்போதும் இதனை ஆதரிக்க மாட்டோம் எனக்கூறும் மு கா மேலும் சிலவற்றை பெற்றுக்கொண்டு ஆதரவளித்து நாம் முட்டாளாகி விட்டோம் என அதன் தலைவர் நூறாவது தடவையாக சொல்வார் என்பதே உண்மை.
தற்போது மீண்டும் இத்திருத்தம் பற்றி பேரின கட்சிகள் முயற்சிக்கும் இன்றைய நிலையில் இதற்கெதிராக பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் பொது மக்கள் மத்தியில் வந்து வீறாப்பு பேசியுள்ளார் எமது பிரதி அமைச்சர்.
நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் நிலை இப்படித்தான் உள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் பூனை போன்று தூங்குவது,வெளியே வந்ததும் பயில்வான் இலேகியம் திண்டவன் போல் வீரம் பேசுவது.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் மேற்படி தேர்தல் திருத்த நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் இந்த பொல்லாட்சி அரசை எதிர்த்து எதிர் தரப்பில் உட்கார வேண்டும் என்பதை கடந்த பொது தேர்தலில் ஹரீசின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என்ற வகையில் உலமா கட்சி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இது ஒரு வரலாற்று ரீதியிலான எதிர்ப்பாக அமையும். ஜே ஆர் காலத்தில் தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை கொண்டு செல்ல முயன்ற சர்வாதிகாரத்துக்கெதிராக தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே இராஜினாமா செய்து வரலாறு எழுதினார். அந்தளவுக்கு சமூக பற்றை காட்டும்படி நாம் ஹரீசிடம் சொல்லவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தரப்பில் அமரும் படியே கோரிக்கை விடுகின்றோம்.
தேர்தல்முறை திருத்தம் தோடர்பான பேச்சு நடைபெறும் போது முஸ்லீம்கள் எதிர்பர்என்பது ஜனாதிபதி அறிந்திருந்தார்.
ReplyDeleteஎனவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறும் போது அதாவுல்லாவை அழைத்த அரசின் சுக பிரிவு முஸ்லீம்களின் கவனத்தை திசைதிருப்பும் படி கேட்டுகொண்டனர்.
அதன்படி ஓப்பரேஷனை கையில்எடுத்த அதவுல்லா கிழக்கின் எழுச்சிஎன்ற தெருக்கூத்தை போட்டு மக்களை திசைதிருப்பி கொண்டிருக்க மறுபுறத்தில் தெர்தல் திருத்த சட்மூலத்தை செய்து முடித்தனர்.அதன் பிறகு கிழக்கின் எழழுச்சி ஓய்ந்துவிட்து.விரைவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது அடுத்த மாகண முதலமைசராயோ ஆகும்ஆசையில் அந்த ஜீவன்காத்து கிடகிறது.
who will pay the money which I spent to collect the votes?
ReplyDeleteஉண்மைகள் தணிக்கை செய்து என்ன பயன் உம் சமூகத்தை அறிவிலீகளாக வைத்திருக்கவே விரும்புகிறீர்கள்,#ஜப்னா முஸ்லீம்.
ReplyDeleteதேர்தல் முறை மாற்றத்தில் முஸ்லீம்கள் கவனம் செலுத்தாமல் திசைதிருப்ப அரசின் ஆணைப்ழுபடி எழுச்சி நாடகம் போட்ட அரசியல் வாதி இப்போது ஓய்ந்துவிட்டது ஏன்.
ReplyDelete