"ஜனாதிபதியின் பேச்சை பிடித்துக்கொண்டு, எதிர்க்கட்சியினர் தமது மோசடிகளை மறைக்க பிரயத்தனம்"
நாட்டில் நடைபெற்ற நிதிமோசடி மற்றும் ஊழல்களுடன் தொடர்புடையவர்களை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடு பார்க்காமல் தண்டிக்குமாறு ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,
ஜனாதிபதியின் அண்மைய பேச்சை தூக்கிப் பிடித்துக் கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் தங்கள் மோசடிகளை மறைத்துக் கொள்ள பிரயத்தனப்படுகின்றார்கள்.
ஆனால் ஆளும்கட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் குற்றம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்.
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் அதிகாரிகளுக்கும் சுதந்திரமாக செயற்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடடுள்ளார்.
எனவே அச்சமின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள், ஊழல் மோசடிக்கார்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விஜித ஹேரத் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment