Header Ads



"இந்த மரண தண்டனை, சவுதியின் நியாயமான நீதி விசாரணையை வெளிக்காட்டுகிறது"

தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவற்றப்பட்டுள்ளது.

சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் துர்கி பின் சவுத் அல் கபீர். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ரியாத்தில் எல்லைப்பகுதியில் இருந்த பாலைவன முகாம் ஒன்றில் தங்கியிருந்த பொழுது, அவருடன் தங்கியிருந்த நண்பர் அடெல் அல் மெஹிமேட் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. தகராறின்  உச்சத்தில் அடேலை சுட்டுக் கொன்று விட்டார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 18-10-2016 அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தண்டனை சவுதிஅரேபியாவின் நியாயமான நீதிவிசாரணை முறையை வெளிக்காட்டுகிறது என்று மரண தண்டனை நிறைவற்றப்பட்ட இளவரசர் சவுத் அல் கபீரின் மாமா அப்துல் ரஹ்மான் அல் பலாஜ்  தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.