Header Ads



பிந்தியேனும் மைத்திரிபாலவுக்கு, இவ்விடயம் புரிந்தமையையிட்டு மகிழச்சியடைகின்றேன் - மஹிந்த

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார வீரரட்ன கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடம் முன்னாள் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

சில ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் பொலிஸார் விடுதலை செய்துள்ள நிலையில், தற்போது கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.இதனை நான் மட்டும் சொல்லவில்லை, நாட்டின் ஜனாதிபதியும் இதைத் தான் கூறுகின்றார்.

எப்.சீ.ஐ.டி., புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு என்பன அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியே கூறுகின்றார்.

பிந்தியேனும் ஜனாதிபதிக்கு இந்த விடயம் புரிந்தமையையிட்டு நான் மகிழச்சி அடைகின்றேன்.

யாழ்ப்பாண மாணவர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எனது காலத்தில் இடம்பெற்றிருந்தால் மஹிந்த சுட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும்.

எனினும், தற்போது இந்த சம்பவத்தை பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

நாட்டின் அரசியல் சூழ்நிலையை மாற்றியமைத்தவாறே மீளவும் மாற்றியமைக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இத்தனை கிழவனாகி டையும் கலரும் அடிச்சி அடிச்சி, இரண்டு முறை படுதோல்வியடைந்தும் இன்னமும் பதவிவெறிபிடிச்சி நடனமாடும் உமக்கு இதன் பிறகு ஒரு நாளும் இந்த நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்பது இன்னமும் பிந்தியேனும் விளங்காமல் மயக்கத்தில் ஆட்டாடுகின்றீரே என எனக்குச் சரியான கவலையாக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.