Header Ads



அக்கரைப்பற்றில் நாளை இரத்ததான நிகழ்வு


(ஏ.எல்.நிப்றாஸ்) 

சமூக மேம்பாட்டு அமைப்பான 'வீ-ட்ரஸ்ட்' ((WeTrust) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம், அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (16.10.2016) காலை 9 மணி முதல் இடம்பெறவுள்ளது. 

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் அஸ்-ஸிறாஸ் மகாவித்தியாலயம் போன்றவற்றில்  2001ஆம் ஆண்டில் உயர்தரம் கற்று வெளியேறிய மாணவர்களால் உருவாக்கப்பட்ட வீ-ட்ரஸ்ட் அமைப்பானது சமூக கலாசாரம், வாழ்வாதாரம், கல்வி, அனர்த்த உதவி போன்ற பல்வேறு சமூகநல வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றது. அந்தவகையில், இவ்வமைப்பின் இன்னுமொரு முயற்சியாக மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யவுள்ளனர். உதிரம் கொடுத்து உயிரைக்காப்பதில் ஈடுபாடுள்ள சமூகநலன் விரும்பிகளான ஆண், பெண் இரு பாலாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்க முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.