இலங்கைக்கு உதவ, நாம் தயார் - விளாமிடிர் புட்டின்
இலங்கைக்கு உதவுவதற்கு நாம் தயாராக இருப்பதாக ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர்புட்டின் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் - பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (16) இரவு இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடின், ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, இந்த நட்புறவு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
US is loosing and USR is gaining slowly around the world
ReplyDeleteWe do not want your help, as your help in Syria yields results by killing innocent kids,babies,women and elder people for no cause theirs. Your help to other countries resulted in dividing and causing destruction.Once your help comes to Sri Lanka, innocent and helpless Muslims have to pay prices which we do not want. Please President do not get such 'help'from Russia.
ReplyDeletefgfgfg
ReplyDelete