Header Ads



டில்லு, நிமலன், ஜூட், பஹீல், சன்னா, ஆவா பெயர்களில் யாழ்ப்பாணத்தில் பாதாள குழுக்கள்

யாழ். குடாநாட்டில் ஆவா குழு உட்பட 6 பாதாள உலகக் குழுக்கள் இயங்குவதாக இவற்றுக்கெதிராக பாரிய தேடுதல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுக்கள் தொடர்பிலான தகவல்களையும் சேகரித்துள்ள  தேசிய உளவுப் பிரிவு, அது தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ள நிலையில் மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள் இந்த குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

ஆவா குழுக்கு மேலதிகமாக குடா நாட்டில்  நிமலன், டில்லு, ஜூட், பஹீல் மற்றும் சன்னா ஆகிய பெயர்களில் இந்த பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக வட பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்  கூறினார்.    
  
இந்த பாதாள உலகச் செயற்பாடுகளையும் முறியடிக்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வட பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமாரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அது குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அடுத்து வரும் நாட்களில் குடா நாடெங்கும் தேடுதல் வேட்டைகளை ஆரம்பிக்க பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தயாராகியுள்ளனர். பாதாள உலகக் கோஷ்டியினரை இலக்கு வைத்து இந்த தேடுதல்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.

1 comment:

  1. வருங்காலத்தில் இவை தமிழ் தீவிரவாத இயக்கங்களாக எழுச்சி பெறலாம். இவற்றை முளையிலேயே கிள்ளி எறிதல் வேண்டும். ஆரம்ப காலங்களில் கடத்தல் வியாபாரங்களுக்காக உருவாக்கப்பட்டு பின்னர் தேசியம் என்கிற போர்வைக்குள் உள்வாங்கப்பட்டு தீவிரவாத சிந்தனையோடு கடத்தல்களையும் செவ்வனே செய்த புலி paasisa

    ReplyDelete

Powered by Blogger.