Header Ads



எனது சொந்த இடங்களை விற்றே, வாழ்க்கை நடத்துகின்றேன் - சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு கிடைத்த அனைத்து வரப்பிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ச இல்லாது செய்து அழித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் விடுதலைப்புலிகள் என்னை கொலை செய்து விடுவதாக பிரச்சாரங்கள் செய்த காலப்பகுதியில் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்களையும் மஹிந்த இல்லாது செய்தார்.

நான் ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்லும் போது எனது வங்கிக் கணக்கில் இருந்தது 30 இலட்சம் ரூபாய் மாத்திரமே எனக்கு கொடுக்கப்பட்டது அனைத்துமே பறிக்கப்பட்டது.

அதன் பின்னர் என்ன செய்ய வாழ வேண்டுமே எப்படி வாழ்வது. எனக்கு திருடவும் முடியாது தெரியாது, திருடவும் மாட்டேன். அப்போது எனது பரம்பரை சொத்தான இடம் ஒன்றினை விற்பனை செய்தேன்.

அந்த பணத்தின் மூலமாகவே எனது புதல்வியின் திருமணத்தினை செய்து வைத்தேன். தற்போதும் எனது சொந்த இடங்களை விற்றே வாழ்க்கை நடத்துகின்றேன். எவ்வாறாயினும் ராஜபக்சர்களின் உதவி எனக்கு ஒருபோதும் அவசியம் இல்லை எனவும் சந்திரிக்கா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.