பல ஆயிரம் பெறுமதியான பச்சை மாணிக்கக் கல், மியன்மாரில் கண்டுபிடிப்பு - சீனா விழுங்குகிறது
மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது.
மியான்மரில் சுரங்க தொழிலாளர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல் ஒன்றை அவர்கள் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். இதன் எடை சுமார் 175 டன் என கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள பாறையின் மொத்த மதிப்பு இனதிய பணத்தில் சுமார் 1100 கோடி என கருதப்படுகிறது.
வெட்டி எடுக்கப்பட்டு மெருகேற்றப்படாத குறித்த கற்களை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே குறித்த கற்களினால் ஆபரணங்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்க பயன்படுத்த உள்ளனர்.
மியான்மர் அரசுக்கு அந்த மாணிக்கக் கற்களுக்கான உரிய விலையை சீனா வர்த்தகர்கள் அளிக்க உள்ளனர். மியான்மரின் மொத்த வருவாயில் பாதி அளவிற்கு பச்சை மாணிக்கக் கற்களினால் பூர்த்தி செய்யப்படுகிறது.
குறித்த மாணிக்கக் கல்லை தோண்டி வெளியே எடுத்த சுரங்க தொழிலாளர்களுக்கு உரிய சன்மானம் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இன்னும் அவை உறுதி செய்யப்படவில்லை. தோண்டி எடுக்கப்பட்ட கற்பாறை அரசுக்கு சொந்தம் என்பதால், அரசு வழங்கும் சன்மானம் மட்டுமே தொழிலாளர்களுக்கு சொந்தம். ஆனால் இதுவரை அதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.
Post a Comment