Header Ads



நடு வீதியில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, தொழுகையில் ஈடுபட்ட ஓட்டுனர்


பிரித்தானிய நாட்டில் பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற இஸ்லாமிய ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை பாதி வழியில் நிறுத்தி விட்டு தொழுகையில் ஈடுப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Hampshire நகரில் Meon Junior என்ற பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அண்மையில் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் சென்ற பேருந்தை இஸ்லாமிய ஓட்டுனர் ஒருவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா முடிந்த நிலையில் நேற்று அனைவரும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

பள்ளியை அடைய ஒரு மைல் தூரம் உள்ள நிலையில், திடீரென எவ்வித அறிவிப்பும் இன்றி ஓட்டுனர் பேருந்தை நடுவழியில் நிறுத்தியுள்ளார்.

பின்னர், பேருந்தை விட்டு இறங்கி அவர் தனது கால்களை கழுவிவிட்டு சாலையில் ஒரு சிறிய துணியை விரித்து அதன் முட்டியிட்டு தொழுகை செய்ய தொடங்கியுள்ளார்.

ஓட்டுனரின் இச்செயலால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு தொழுகையை முடித்த ஓட்டுனர் பேருந்தில் ஏறி பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

ஓட்டுனரின் இச்செயலுக்கு மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், ‘ஓட்டுனர் நடுவழியில் பேருந்தை நிறுத்தியது தவறு. அதே சமயம், அந்த வழியில் கனரக லொறிகள் அடிக்கடி செல்லும் என்பதால் பேருந்து மீது மோதி விபத்தும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுனரின் செயல் குறித்து ஆசிரியர் ஒருவர் பேசியபோது, ‘தொழுகையை சிறிது நேரம் அவர் ஒத்தி வைத்திருக்கலாம். பள்ளிக்கு செல்லும் தூரம் மிக அருகிலேயே இருந்தும் அவர் இவ்வாறு நடந்துக்கொண்டது அதிர்ச்சியாக உள்ளது’ என கூறியுள்ளார்.

இஸ்லாமிய மத தலைவரான Sumel Chowdhury என்பவர் பேசியபோது, ஓட்டுனர் செய்த காரியம் தவறு தான். இஸ்லாமியர்கள் ஒரு நாளில் 5 முறை தொழுகையில் ஈடுப்படுவார்கள்.

ஆனால், இவற்றை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒரு வேளை தொழுகை தள்ளிப்போனால், அதனை இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் கூட செய்துக்கொள்ளலாம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் இது குறித்து பேசியபோது, ‘ஓட்டுனர் செய்த செயல் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஓட்டுனருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. தொழுகை கழா ஆகக்கூடிய நேரம் நெருங்கியிருக்கலாம். வேறு வழியின்றி அவர் உடனே தொழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். Allah knows the best.

    ReplyDelete
  2. Sumel Chaudary இன் கூற்று முட்டாள்தனமானது. அவருக்கு மார்க்கம் தெரியாது போல் அல்லது Media அவரின் கூற்றை மாற்றி எழுதிவிட்டார்களோ தெரியாது.
    " நிச்சயமாக தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவே உள்ளது" ஆகவே 2 hours பிந்தி தொழலாம் எனும் கருத்து முற்றிலும் தவரானது..
    ஆனால் இங்கு உள்ள Situation வேறு, Bus ஓட்டுனர் ஒரு பிரயாணி, ஆகவே தொழுகையை சேர்ததும் , சுருக்கியும் பிற்படுத்தி தொழ அனுமதி உண்டு.
    இது bus ஓட்டுனரின் இஸ்லாமிய தெளிவின்மையையே காட்டுகிறது. மேழும் இஸ்லாத்தில் மடத்தனமான செய்கைகளுக்கு என்றுமே இடமில்லை. Safety First, Human life is so precious in Islam.

    ReplyDelete
    Replies
    1. Your answer is perfectly right brother

      Delete
  3. அரைகுறையா இல்லாட்டி திடீர் என்று இஸ்லாம் தெரிஞ்சவர்கள் அப்படி தான் செய்வார்கள்.இஸ்லாமிய கடமைகள் செய்யும் போது மற்றவர்களுக்கு வெறுப்பு பாதிப்பு ஏட்படாதவாறு செயல்கள் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. இவ்வாறான விடயங்கள் கூடுதலாக கத்தார் போன்ற நாடுகளில் நடைபெறுகின்றது. இதில் விசேஷம் என்னவென்றால் பாகிஸ்தானியர் தான் இவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள். இவர்களின் இவ்வாறான செயல்கள் இஸ்லாம் பற்றி முஸ்லிம் அல்லாதவர்கள் தவறாக புறிந்து கொள்வதற்கன வாய்ப்புகள் அதிகம். எனக்கு ஏதோ இந்நாட்டவர்கள் முகஸ்துதிக்காக வணக்கங்ககளை செய்வது போல் தெரிகிறது. தொழுகை குறித்த நேரத்தில் தொழ வெண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.