மைத்திரியின் மகன் செய்த, குற்றங்கள் மூடிமறைப்பு
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவினால் செயற்படுத்தப்படும் குழுவினால் Clique என்ற இரவு நேர விடுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளமல் பொலிஸாரினால் விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக கொழும்பு டெலிகிராப் தகவல் வெளியிட்டுள்ளது.
தஹாம் சிறிசேன மற்றும் அவரது நண்பர்கள் விடுதிக்குள் நுழையும் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் இரவு நேர விடுதி பாதுகாப்பாளர்களை அச்சுறுத்தியத்திய காட்சி தெளிவாக CCTV காணொளியில் பதிவாகியுள்ளது. இருந்த போதிலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரையிலும் தஹாம் சிறிசேனவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தாய்லாந்து விஜயத்தின் பின்னர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான அனைத்து விசாரணைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
எனினும் விசாரணைகளை முன்னெடுக்கும் மருதானை பொலிஸார் இதுவரையில் குற்றவாளிகள் தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகரவுக்கு பல முறை தொலைப்பேசி அழைப்பேற்படுத்தியுள்ள போதிலும் அவர் பதிலளிக்கவில்லை என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தஹாம் சிறிசேன மற்றும் அவரது நண்பர்களை விடுதிக்கு நுழைய அனுமதிக்காத நிலையில் தஹாம் சிறிசேனவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பாளர்களை அச்சுறுத்தியதுடன் பின்னர் விடுதிக்கு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பூ சாடி ஒன்றின் மூலம் விடுதி பாதுகாப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எப்படியிருப்பினும் சில மணிநேரங்களுக்கு பின்னர் தாக்குதல் மேற்கொண்டவர்களை அடையாளம் காணமுடியவில்லை என பாதுகாப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான கருணாரத்ன பரனவித்தாண கடந்த 12ஆம் திகதி இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
தனது மகன் தொடர்புப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் சட்டத்தை மீறி தனது மகன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் காணொளியை தன்னிடம் காட்ட வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment