விரைவில் எனது ஆட்சி மலரும் - கம்பி எண்ணும் பிள்ளையானிடம் தெரிவித்த மஹிந்த
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானை பார்வையிட்டதாக சிறைச்சாலை தகவல்களை சுட்டிக்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, பிள்ளையானுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையினை இதன்போது மஹிந்த பிள்ளையானிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவைளை மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் யுத்த வீரர்களின் நினைவு தூபியை திறந்து வைத்து உரையாற்றும்போது பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் இந்த அரசாங்கத்தில் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
கம்பி எண்ண வேண்டியவர்கள், கம்பி எண்ணிக்கொண்டிருப்பவர்களுடன் சங்கமிக்கிறார்கள்.
ReplyDeleteஇனம் இனத்துடன்தான் சேரும்.