ஜனாதிபதி மைத்திரியின், வீழ்ச்சி ஆரம்பமா..?
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட விசேட உரையின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சந்திக்கவுள்ள நிலையில் ஜனாதிபதியின் கருத்தினால் பிரதமர் அதிர்ச்சியடைந்துள்ளதாக இன்று காலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியின் கருத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு அவருக்கு ஆதரவு வழங்கிய சிவில் அமைப்பு மற்றும் தொழிற்சங்கங்களினால் நாளை நடத்தப்படவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பிலான ஆயத்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் பல அமைப்பு பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.
சுயாதீன ஆணைக்குழு சபை மற்றும் சுயாதீன பொலிஸ் விசாரணைகளுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு சிவில் அமைப்பு தலைவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி எட்டு எனும் மக்கள் புரட்சிக்கும் கடந்த அரசாங்கத்தின் தோல்விக்கும் இந்த சிவில் அமைப்புக்கள் பிரதான காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணில் என்ற நச்சுப் பாம்பை தன் மடியில் போட்டதால் வந்த வினை.
ReplyDeleteஜனாதிபதீ வெற்றி பெற்றதும் ஐ.தே.கட்சியின் வாக்குகளால் அதேவேளை அந்த வாக்கு இல்லாமல் இருந்தால் மஹிந்தவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்திருக்கும் .ஜனாதிபதி நாட்டின் நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்பது உண்மை அதேபோல தனது கட்சியின் மீதும் அதிக அக்கறை கொண்டுள்ளார்.கட்சியை காப்பாற்றும் முயற்சியினால்தான் தற்போது இவ்வளவு அதிகமான அமைச்சர்கள் உருவாக காரணமாக அமைந்ததும் மஹிந்த பக்கத்தில் உள்ள பழைய கள்ளர்கள் எல்லாம் சேர்த்து எடுத்துக்கொண்டு .மக்களுக்கு வாக்களித்தபடி ஊழல்வாதிகளை தண்டிக்க முடியாமல் தடமாற வேண்டிய நிலை ஏற்பட்டது .நாடு நன்றாக இருந்தால்தான் கட்சி இருக்க முடியும் ,கட்சி கட்சி என்று பிடித்துக்கொண்டு இருப்பதால் இவர் இருதரப்புக்கும் நாட்டை செரியான முறையில் இட்டுச்செல்ல முடியாமையால் வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்,இன்றைய நாட்டின் நிலையை பொறுத்தவரையில் ஜனாதிபதி அவர்கள் கட்சிப் பாதுகாப்பு என்ற மந்திரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,வாக்களித்த62இலட்சம் மக்களும் சிறி லங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் வாக்களிக்கவில்லை.மாறாக மஹிந்தைக்கு எதிர்ப்பாக வெறுப்பை காட்டுவதற்காகவே வாக்களித்தார்கள்,அந்த வாக்கில் வெற்றியை பெற்றுக்கொண்டு சுதந்திக்கட்சி வளர வேண்டும் அடுத்த ஆட்சி சுதந்திர கட்சியின் தனி ஆட்சி மலர வேண்டும் என்று காய் நகர்த்துவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது,அது தேர்தல் காலத்தில் மக்கள் எடுக்க வேண்டிய முடிவு இன்னும் 3.4.வருடத்தில் வரக்கூடிய தேர்தலை எதிர்கொள்வதற்காக நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நியாயத்தை தட்டிக் கழிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது,இரண்டு தோணியில் கால் வைத்து பிரயாணம் செய்ய முடியாது ,கட்சி வேண்டும் ஆட்சியும் வேண்டும் என்றால் கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை என்ற கொள்கையே பின்பற்றப்படுகிறது,கட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டவர்களுக்கு பதவிகளும் அமைச்சு பதவிகளும் கொடுத்து அழகு பார்த்தால் அப்போ எதற்காக தேர்தல் தெரிவு?அவ்வாறு ஒன்று தேவை இல்லையே,இலங்கை உண்மையான ஒரு ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும் என்றால் கட்சி என்ற விடயங்களை களைந்துவிட்டு இருக்கும் அரசாங்கத்தை செரியான வழி நடத்தலோடு பக்க சார்பில்லாமல் நடத்திக்க வேண்டும் இதுதான் இன்றைக்கு இலங்கைக்கு தேவை ,மாறாக கட்சியை காப்பாற்றும் வேலையில் இறங்கினால் விட்டுக்கொடுத்துப் போக வேண்டி ஏற்படும்.அப்படியானால் எந்தக் குற்றவாளிகளையும் தண்டிக்க முடியாது.நாடும் நாசமாய் போகும்.
ReplyDeleteThe real color of SriSena is revealed by his talk. No one can be above the law. The president is making statements to gallery every now and then. If he has a problem with his establishment he should call them and advise them instead of making statements in the public meetings. He is the head of the government.It shows his immaturity. On the other he is opposing action against Gotabaya and army commanders. if they have committed a crime one can not expect them to be above the law. President has to explain. Anyway we should not forget that he is a crony of Rajapaksa
ReplyDeleteyahapalanaya no need more
ReplyDelete