Header Ads



'வழிபட சென்ற கோயில், தலையில் இடிந்து விழுந்த கதை இது'

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பங்களில் தான் முன்வைத்த பிரச்சினைகளை விட ஜனாதிபதி தம்மிடம் பிரச்சினைகளை முன்வைத்தாக கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று (23) அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கொண்டு சென்றால், அவர் அவரது பிரச்சினைகளை எங்களிடம் கூறுகிறார்.

வழிபட சென்ற கோயில் தலையில் இடிந்து விழுந்தது போன்ற கதையே இது.
யாருக்கு அதிகாரம் இருக்கின்றது என்பது அரசாங்கத்தின் பிரதான பிரச்சினையாக இருக்கின்றது.

ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்தும் அரசாங்கத்தில் நடக்கும் பனிப்போரின் ஒரு பிரதிபலனே எனவும் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இன்னும் அரசாங்கம் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்ற சிந்திக்கவில்லை.சிந்திக்க நேரம் இல்லை காரணம் ஜனாதிபதிக்கு கட்சியை மஹிந்தவின் தொல்லையில் இருந்து பாதுகாப்பது எப்படி என்ற சிந்தனை ரணிலுக்கு இந்த அரசாங்கத்தை எப்படி ஐந்து வருடம் ஓட்டிக்கொள்ளலாம் அடுத்த தேர்தலில். மைதிரியை கழட்டிவிட்டு தனியாக ஆட்சி செய்வதற்கான சிந்தனை ,பொதுவாக நாட்டில் மூன்று தலைவர்களின் தலைமையில் ஆட்சி நடக்கிறது ,மஹிந்த மைதிரி ரணில் இந்த மூன்று பேரும் அடுத்த ஆட்சியை எப்படி பிடிக்கலாம் என்ற சிந்தனையே தவிர இப்போது இருக்கும் ஆட்சியை வைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் அபிவிருத்தி செய்யும் சிந்தனை கிடையாது,கூட்டரசாங்கம் கூழாப்போய்விட்டது.மக்கள் யாரிடம் போவது யாரிடம் நம் பிரச்சினைகளை சொல்லலாம் இந்த அதிகாரி ரணிலின் ஆளா?மைதிரியின் ஆளா?அல்லது மஹிந்தவின் பழைய அதிகாயா?என்று மக்கள் சொல்லவும் முடியாமல் சொல்லியும் முடியாமல் தவிக்கிறார்கள்,இந்த அரசாங்கம் மூன்றாவது வருடம் கடைசிப்பகுதியில் அல்லது நாவது வருட ஆரம்பத்தில் அஸ்தமாகும் நிலையே ஏற்படும்.ஐந்து வருடத்தை எட்டாது என்பது இப்போதே விளங்கிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.